செய்ரோபேஜியா கண்டலபரம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | C. candelabrum
|
இருசொற் பெயரீடு | |
Ceropegia candelabrum L. | |
வேறு பெயர்கள் | |
|
செய்ரோபேஜியா கேண்டலபரம் (தாவர வகைப்பாட்டியல்: Ceropegia candelabrum)[1] அல்லது பெருங்கொடி என்னும் இத்தாவரம் அஸ்க்லெபியாடோய்டே என்ற துணைக் குடும்பத்தைச் சேர்ந்தது. இத்தாவரத்தின் மஞ்சரிகளின் அடர்பச்சையுடன் மஞ்சள் கலந்த சிவப்பு நிற கோடுகள் போன்ற தோற்றம் மெழுகுவர்த்தி போன்று காணப்படுவதால் லத்தீன் மொழியில் கேண்டலப்ரம் என்று பெயர் பெறப்பட்டது.[2]
செய்ரோபேஜியா கேண்டலபரம் வற்றாத, சதைப்பற்றுள்ள, உருண்டையான கிழங்கினைக் கொண்ட இரட்டைச் செடியாகும். வலுவான, வெற்றுத் தளிர்கள் 3 முதல் 4 மிமீ விட்டம் கொண்டவையாகவும் இலைகள் சதைப்பற்று கொண்டு தடித்தும் இருக்கும். சற்றே சதைப்பற்று குறைந்த இலைகள் கத்தி போன்று நேரியல் தோற்றத்தில், நீள்வட்டத்தில் இருந்து வட்டமான முனை கொண்டு கூர்மையாக காணப்படும். அவை 2 முதல் 7 செமீ நீளமும் 0.8 முதல் 3.5 செமீ அகலமும் கொண்டவையாகும்.
இவை இந்தியாவிலும், இலங்கையிலும், [[வியட்னாம்|வியட்னாமிலும் காணப்படுகிறது.[3] இச்செடி ஆகஸ்டு முதல் ஜனவரி வரை பூத்து, செப்டம்பர் முதல் ஜனவரி மாதங்களில் காய்க்கும் தன்மையுடையதாகும்.
இத்தாவரம் இதன் தோற்றப்பகுதிகளில் அருகி வருவதால், செயற்கையாக உலகின் பிற பகுதிகளில் பரப்ப பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது.[4]