செரி அமான் மாவட்டம் Daerah Sri Aman Sri Aman District | |
---|---|
ஆள்கூறுகள்: 1°14′7″N 111°28′11″E / 1.23528°N 111.46972°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | செரி அமான் பிரிவு |
மாவட்டம் | செரி அமான் மாவட்டம் |
நிர்வாக மையம் | சிமாங்காங் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,323 km2 (897 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 64,905 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
செரி அமான் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Sri Aman; ஆங்கிலம்: Sri Aman District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் செரி அமான் பிரிவில் உள்ள இரு மாவட்டங்களில் ஒரு மாவட்டம் ஆகும். சிமாங்காங் நகரம் (Simanggang) இந்த மாவட்டத்தின் நிர்வாக மையமாக விளங்குகிறது.[1]
சிமாங்காங் நகரம், 1974 முதல் 2019 வரை செரி அமான் என்று அழைக்கப்பட்டது. மலாய் மொழியில் அமைதி நகரம் என்று பொருள்படும். செரி அமான் மாவட்டம் 2,323 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
2010-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்த மாவட்டத்தின் மக்கள் தொகை 64,905. அவர்களில் 62.2% இபான் மக்கள்; 22.4% மலாய் மக்கள்; 14.1% சீனர் மக்கள்; மற்றும் 0.6% பிடாயூ இனக்குழுவினர்.
இபான் மக்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள் ஆகும். சீனர்கள் சில்லறை கடைகள் வைத்துள்ளனர். மற்றும் மலாய்க்காரர்கள் மற்றும் பிடாயூ இனக்குழுவினர் அரசாங்க ஊழியர்களாக உள்ளனர்.[2]
செரி அமான் பிரிவில் பத்தாங் ஆய் தேசியப் பூங்கா (Batang Ai National Park) உள்ளது; மலுடாம் தேசியப் பூங்கா (Maludam National Park) ஆகிய புகழ் வாய்ந்த தேசிய பூங்காக்கள் சுற்றுலா ஈர்ப்புகளாக உள்ளன.
சுற்றுலாத்துறை, குறிப்பாக சுற்றுச்சூழல் சுற்றுலா, மற்றும் கலாசார சுற்றுலா போன்றவை உள்ளூர்ப் பொருளாதாரத்தின் முக்கிய பகுதிகளாகத் திகழ்கின்றன.[3]