செரி காடிங் (P149) மலேசிய மக்களவைத் தொகுதி ஜொகூர் | |
---|---|
Sri Gading (P149) Federal Constituency in Johor | |
செரி காடிங் மக்களவைத் தொகுதி (P149 Sri Gading) | |
மாவட்டம் | பத்து பகாட் மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 78,602 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | செரி காடிங் தொகுதி |
முக்கிய நகரங்கள் | பாரிட் யானி; பாரிட் ஜாவா; பாகோ; புக்கிட் பக்ரி; பஞ்சூர் |
பரப்பளவு | 300 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
மக்களவை உறுப்பினர் | அமினோல் உடா அசன் (Aminolhuda Hassan) |
மக்கள் தொகை | 175,174 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
செரி காடிங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sri Gading; ஆங்கிலம்: Sri Gading Federal Constituency; சீனம்: 四加亭国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் பத்து பகாட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P149) ஆகும்.[5]
செரி காடிங் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து செரி காடிங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
பத்து பகாட் மாவட்டம், ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்தின் தலைப்பட்டணமும் முக்கிய நிர்வாக மையமுமான பத்து பகாட் நகரம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 239 கி.மீ.; மூவார் நகரில் இருந்து 50 கி.மீ.; குளுவாங் நகரில் இருந்து 52 கி.மீ.; ஜொகூர் பாரு நகரில் இருந்து 100 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது.
இந்த மாவட்டத்திற்கு வடமேற்கில் மூவார் மாவட்டம்; தென்கிழக்கில் குளுவாங் மாவட்டம்; தெற்கில் பொந்தியான் மாவட்டம்; ஆக வடக்கில் சிகாமட் மாவட்டம் ஆகிய நான்கு மாவட்டங்கள் அமைந்து உள்ளன.
பத்து பகாட் நகரம், அண்மையில் பண்டார் பெங்காராம் (Bandar Penggaram) எனும் புதுப் பெயரைப் பெற்றது. இந்த நகரம் மிகத் துரிதமாக வளர்ச்சி பெற்று வருகிறது. இப்போது ஜொகூர் பாருவுக்கு அடுத்த நிலையில் ஜொகூர் மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது.
செரி காடிங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1974 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
செரி காடிங் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
4-ஆவது மக்களவை | P109 | 1974–1978 | உசேன் ஓன் (Hussein Onn) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
5-ஆவது மக்களவை | 1978–1981 | |||
1981–1982 | முசுதபா முகமட் (Mustaffa Mohammad) | |||
6-ஆவது மக்களவை | 1982–1986 | |||
7-ஆவது மக்களவை | P124 | 1986–1990 | ||
8-ஆவது மக்களவை | 1990–1995 | முகமட் யாசின் கமாரி (Mohd. Yasin Kamari) | ||
9-ஆவது மக்களவை | P134 | 1995–1999 | அம்சா ரம்லி (Hamzah Ramli) | |
10-ஆவது மக்களவை | 1999–2004 | முகமச் அசீஸ் (Mohamad Aziz) | ||
11-ஆவது மக்களவை | P149 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | அசீஸ் கப்ரவி (Aziz Kaprawi) | ||
14-ஆவது மக்களவை | 2018–2020 | சாருதீன் சாலே (Shahruddin Md Salleh) |
பாக்காத்தான் அரப்பான் (பெர்சத்து) | |
2020 | பெரிக்காத்தான் நேசனல் (பெர்சத்து) | |||
சுயேச்சை | ||||
2020–2022 | தாயக இயக்கம் | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | அமினோல் உடா அசன் (Aminolhuda Hassan) |
பாக்காத்தான் அரப்பான் (அமாணா) |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
அமினோல் உடா அசன் (Aminolhuda Hassan) | பாக்காத்தான் அரப்பான் | 23,242 | 37.94 | 10.64 ▼ | |
முகமட் லசிம் புர்கான் (Mohd Lassim Burhan) | பாரிசான் நேசனல் | 19,242 | 31.41 | 10.25 ▼ | |
சனரியா அப்துல் அமீது (Zanariyah Abdul Hamid) | பெரிக்காத்தான் நேசனல் | 18,475 | 30.16 | 29.70 | |
மட்சிர் இப்ராகிம் (Mahdzir Ibrahim) | தாயக இயக்கம் | 305 | 0.50 | 0.50 | |
மொத்தம் | 61,264 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 61,264 | 98.66 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 834 | 1.34 | |||
மொத்த வாக்குகள் | 62,098 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 78,602 | 77.94 | 8.77 ▼ | ||
பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
மூலம்: [8] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)