செரியான் (P199) மலேசிய மக்களவைத் தொகுதி சரவாக் | |
---|---|
Serian (P199) Federal Constituency in Sarawak | |
செரியான் மக்களவைத் தொகுதி (P199 Serian) | |
மாவட்டம் | செரியான் மாவட்டம் தெபெடு மாவட்டம் சிபுரான் மாவட்டம் |
வட்டாரம் | செரியான் பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 65,273 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | செரியான் மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | செரியான்; தெபெடு சிபுரான் |
பரப்பளவு | 1,463 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1968 |
கட்சி | சரவாக் கட்சிகள் கூட்டணி |
மக்களவை உறுப்பினர் | ரிச்சர்ட் ரியோட் ஜெயம் (Richard Riot Jaem) |
மக்கள் தொகை | 61,744 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1969 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
செரியான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Serian; ஆங்கிலம்: Serian Federal Constituency; சீனம்: 西连联邦选区) என்பது மலேசியா, சரவாக், செரியான் பிரிவில்; செரியான் மாவட்டம்; தெபெடு மாவட்டம்; சிபுரான் மாவட்டம் ஆகிய 3 மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P199) ஆகும்.[5]
செரியான் மக்களவைத் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1969-ஆம் ஆண்டில் இருந்து செரியான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
செரியான் பிரிவு (Serian Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும். 2015 ஏப்ரல் 11-ஆம் தேதி சரவாக், சமரகான் பிரிவில் இருந்து பிரிக்கப்பட்டது. இப்போது தனி பிரிவாகச் செயல்படுகிறது.[7]
1860-ஆம் ஆண்டில் சரவாக் மாநிலத்தில் தொடங்கப்பட்ட இந்த பிரிவு (Division) முறை இன்றும் நீடிக்கிறது. முன்பு சரவாக்கில் ஐந்து பிரிவுகள் மட்டுமே இருந்தன. அவற்றுள் அப்போதைய இரண்டாம் பிரிவில், இப்போதைய பெத்தோங் பிரிவு; மற்றும் செரி அமான் பிரிவு ஆகியவை பிரிவுகளும் அடங்கும்.
கூச்சிங் மாநகரில் இருந்து சுமார் 40 மைல் (64 கி.மீ.) தொலைவில் செரியான் பிரிவு அமைந்துள்ளது. மக்கள் தொகையில் 65% பிடாயூ பழங்குடி பூர்வீக மக்கள். மற்ற முக்கிய இனக்குழுக்கள் இபான், சீனர் மற்றும் மலாய்க்காரர்கள். செரியான் நகரம் அதன் வளமான நிலப் பகுதியுடன்; சாலை மற்றும் நீர் போக்குவரத்துகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
காடுகளில் கிடைக்கும் அனைத்து வகையான காட்டுப் பொருட்களையும் இங்கு காணலாம். அண்மைய காலமாக, இந்த விளைபொருட்களில் பெரும்பாலானவை இந்தோனேசியாவின் கலிமந்தான் காடுகளில் இருந்து கொண்டு வரப் படுகின்றன. விலையும் குறைவு என அறியப்படுகிறது.
செரியான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1969 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
செரியான் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
1969-1971 | நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[9][10] | |||
3-ஆவது மக்களவை | P126 | 1971-1974 | ரகூன் தேபாக் (Rahun Debak) |
சரவாக் தேசிய கட்சி (SNAP) |
4-ஆவது மக்களவை | P136 | 1974-1978 | ரிச்சர்ட் தம்பிங் லாக்கி (Richard Damping Laki) |
பாரிசான் நேசனல் (சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி) (SUPP)]] |
5-ஆவது மக்களவை | 1978-1982 | |||
6-ஆவது மக்களவை | 1982-1986 | |||
7-ஆவது மக்களவை | P159 | 1986-1990 | லைனஸ் அண்ட்ரு லுவாக் (Lainus Andrew Luwak) |
சுயேச்சை |
8-ஆவது மக்களவை | P160 | 1990-1995 | ரிச்சர்ட் ரியோட் ஜெயம் (Richard Riot Jaem) | |
9-ஆவது மக்களவை | P172 | 1995-1999 | பாரிசான் நேசனல் (சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி) (SUPP)]] | |
10-ஆவது மக்களவை | P173 | 1999-2004 | ||
11-ஆவது மக்களவை | P179 | 2004-2008 | ||
12-ஆவது மக்களவை | P199 | 2008-2013 | ||
13-ஆவது மக்களவை | 2013-2018 | |||
14-ஆவது மக்களவை | 2018 | |||
2018–2022 | சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS) (சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி) (SUPP) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
ரிச்சர்ட் ரியோட் ஜெயம் (Richard Riot Jaem) | சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS) | 22,876 | 57.23 | 57.23 | |
அலிம் இம்பிரா (Alim Impira) | சுயேச்சை (Independent) | 6,179 | 15.46 | 15.46 | |
எல்சி திங்காங் (Elsiy Tinggang) | சரவாக் ஐக்கிய கட்சி (PSB) | 5,630 | 14.08 | 14.08 | |
லீரி ஜாபுல் (Learry Jabul) | ஜனநாயக செயல் கட்சி (DAP) | 5,289 | 13.23 | 14.66 ▼ | |
மொத்தம் | 39,974 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 39,974 | 98.41 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 646 | 1.59 | |||
மொத்த வாக்குகள் | 40,620 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 65,273 | 61.24 | 12.85 ▼ | ||
Majority | 16,697 | 41.77 | 5.65 | ||
சரவாக் கட்சிகள் கூட்டணி கைப்பற்றியது | |||||
மூலம்: [11] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)