செர்த்திங்
Soghoteng | |
---|---|
Serting | |
நெகிரி செம்பிலான் | |
ஆள்கூறுகள்: 2°54′08.8″N 102°24′09.9″E / 2.902444°N 102.402750°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | நெகிரி செம்பிலான் |
மாவட்டம் | செம்போல் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 72120[1] |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +60 06458 0000[2] |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | N |
செர்த்திங் (மலாய் Soghoteng; ஆங்கிலம்: Serting; ஜாவி: اتسرتيڠ) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின், செம்போல் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.
செர்த்திங் ஈலிர் (Serting Hilir) பகுதியில் குனோங் டத்துக் உட்பட பல சுற்றுலா இடங்கள் உள்ளன. செர்த்திங்கின் மொத்த பரப்பளவு 2.066 சதுர கி.மீ.[3]
2021-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, செர்த்திங் நகரத்தின் மக்கள் தொகை 5588 ஆகும்.[4] அதில் ஆண்களின் எண்ணிக்கை 2858; பெண்களின் எண்ணிக்கை 2730.
மலாக்கா நீரிணையை பார்க்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள், குனோங் டத்துக் எனும் மலையின் உச்சிக்குச் செல்வது வழக்கம். அங்கு இருந்து மலாக்கா நீரிணையை முழுமையாகப் பார்க்கலாம். வானம் தெளிவாக இருக்கும் போது, மலாக்கா நீரிணைக்கு அப்பால் இருக்கும் சுமாத்திரா தீவையும் பார்க்கலாம்.[5]