| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
செலீனியம் ஆக்சிகுளோரைடு
| |||
வேறு பெயர்கள்
செலீனைல் குளோரைடு
| |||
இனங்காட்டிகள் | |||
7791-23-3 | |||
ChemSpider | 23049 | ||
EC number | 232-244-0 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 24647 | ||
வே.ந.வி.ப எண் | VS7000000 | ||
| |||
பண்புகள் | |||
SeOCl2 | |||
வாய்ப்பாட்டு எடை | 165.87 கி/மோல் | ||
தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
அடர்த்தி | 2.43 கி/செ.மீ3, liquid | ||
உருகுநிலை | 10.9 °C (51.6 °F; 284.0 K) | ||
கொதிநிலை | 177.2 °C (351.0 °F; 450.3 K) | ||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.651 (20 °செ) | ||
கட்டமைப்பு | |||
மூலக்கூறு வடிவம் | |||
தீங்குகள் | |||
R-சொற்றொடர்கள் | 14-23/25-33-35-50/53 | ||
S-சொற்றொடர்கள் | 26-36/37/39-45-60-61 | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LDLo (Lowest published)
|
2 மி.கி/கி.கி (முயல், தோல்)[1] | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
compounds தொடர்புடையவை |
SOCl2, POCl3 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
செலீனியம் ஆக்சி இருகுளோரைடு (Selenium oxydichloride) என்பது SeOCl2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். நீர்மமாகக் காணப்படும் இச்சேர்மத்தின் மின்கடவாப்பொருள் மாறிலி மதிப்பு 55 மற்றும் உயர் மின்கடத்துகை எண்மதிப்பும் கொண்டுள்ளது. இக்காரணங்களால் இச்சேர்மம் ஒரு கரைப்பானாக கவனத்தை ஈர்க்கிறது. அமைப்பின் அடிப்படையில் இது தையோனைல் குளோரைடை ஒத்திருக்கிறது மற்றும் இருமெத்தில் சல்பாக்சைடு இதற்கான வழங்கு கரைப்பானாக உள்ளது.
செலீனியம் ஈராக்சைடை இருகுளோரோ செலீனியசமிலத்துடன் சேர்த்து தொடர்ந்து நீர்நீக்கம்:[2] செய்வதன் மூலமாக செலீனியம் ஆக்சி இருகுளோரைடைத் தயாரிக்கலாம். இம்முறை தவிர செலீனியம் ஆக்சி இருகுளோரைடை பல்வேறு முறைகளில் தயாரிக்க முடியும்.
செலீனியம் ஈராக்சைடும் செலீனியம் நாற்குளோரைடும் சேர்ந்து மறுபகிர்வு வினையின் மூலம் தயாரிக்கும் தொகுப்பு முறையே அசலான தயாரிப்பு முறையாகும். இச்சேர்மம் உடனடியாக நீராற்பகுப்பு அடைகிறது.