செலெசுடிரியம் (Celestrium) என்பது ஒரு வகையான ஆசுடெனைட்டு வகை துருப்பிடிக்காத எஃகின் வர்த்தகப் பெயராகும். அணிகலன் தொழிலில் இது பயன்படுத்தப்படுகிறது. வெண்மையான தங்கம் போல தோற்றமளிக்கும் இது விலை குறைவானதாகவும் நீடித்து உழைக்கக் கூடியதாகவும் உள்ளது. வேதி வினைகளுக்கு ஒரு வலிமையான எதிர்ப்பைக் கொடுக்கும் கலப்புலோகமான இதைக் கையாள்வதும் எளிது. செலெசுடிரியம் அல்லது இதையொத்த வேறு கலப்புலோகங்கள் வெண்மை அல்டிரியம் என்ற வர்த்தகப் பெயரில் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக இவை கண்ணாடி வளையங்களில் பயன்படுத்தப்படுகின்றன[1][2]
.