செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan ; பிறப்பு: சூன் 10, 1962) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[ 1] இவர் முன்னாள் போராளியும் , தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தற்போதைய தலைவரும் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு[ தொகு ]
வடக்கு இலங்கையின் மன்னாரைச் சேர்ந்த அடைக்கலநாதன், தனது 15வது அகவையில் டெலோ இயக்கப் போராளியாக இணைந்தார்.[ 2] டெலோ இயக்கத் தலைவர் சிறீ சபாரத்தினம் 1986 மே 5 இல் கொல்லப்பட்டதை அடுத்து செல்வம் அடைக்கலநாதன் அவ்வியக்கத்தின் தலைவரானார்.[ 2]
செல்வம் அடைக்கலநாதன் 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈதேசவிமு /ஈமபுவிமு /டெலோ /தவிகூ கூட்டு வேட்பாளராக வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டார். கூட்டணி வேட்பாளர்களில் மூன்றாவது அதிகப்படியான விருப்பு வாக்குகள் பெற்றிருந்தும், நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.[ 3] [ 4] இவர் மீண்டும் 2000 தேர்தலில் டெலோ வேட்பாளராகப் போட்டியிட்டு இலங்கை நாடாளுமன்றம் சென்றார்.[ 5]
2001 அக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் , ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி , டெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியன இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆரம்பித்தன.[ 6] [ 7] அடைக்கலநாதன் 2001 தேர்தலில் டெலோ சார்பில் ததேகூ வேட்பாளராக வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[ 8] இவர் மீண்டும் 2004 ,[ 9] 2010 ,[ 10] [ 11] 2015 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[ 12] [ 13] இலங்கையின் 15-வது நாடாளுமன்றம் 2014 செப்டம்பர் 1 இல் கூடிய போது, இவர் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டார்.[ 14] [ 15] அடைக்கலநாதன் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வன்னி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[ 16] [ 17] [ 18]
டெலோ, புளொட் ஆகிய கட்சிகள் 2023 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி என்ற புதிய கூட்டணியை ஈபிஆர்எல்எஃப், தமிழ்த் தேசியக் கட்சி, சனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கின. அடைக்கலநாதன் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் இக்கூட்டணி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[ 19]
↑ "Directory of Members: Selvam Adaikkalanathan" . Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம் . பார்க்கப்பட்ட நாள் 24 September 2020 .
↑ 2.0 2.1 "We are on the correct path'" . புரொண்ட் லைன் 21 (21). 9 அக்டோபர் 2004. http://www.frontlineonnet.com/fl2121/stories/20041022000905200.htm .
↑ 3.0 3.1 de Silva, W. P. P.; Ferdinando, T. C. L. 9th Parliament of Sri Lanka (PDF) . Colombo Sri Lanka: Associated Newspapers of Ceylon Limited. p. 184. Archived from the original (PDF) on 23 June 2015.
↑ "Results of Parliamentary General Election – 1989" (PDF) . Rajagiriya, Sri Lanka: Election Commission of Sri Lanka. p. 33. பார்க்கப்பட்ட நாள் 18 September 2020 .
↑ 5.0 5.1 "Parliamentary General Election - 2000 - Preferences" (PDF) . Rajagiriya, Sri Lanka: Department of Elections. p. 5. Archived from the original (PDF) on 4 March 2010.
↑ D. B. S. Jeyaraj (27 March 2010). "Tamil National Alliance enters critical third phase – 1" . Daily Mirror (Colombo, Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 4 April 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100404042520/http://www.dailymirror.lk/print/index.php/opinion1/6933.html .
↑ "Tamil parties sign MOU" . தமிழ்நெட் . 20 October 2001. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=6400 . பார்த்த நாள்: 25 September 2020 .
↑ 8.0 8.1 "Parliamentary General Election - 2001 - Preferences" (PDF) . Rajagiriya, Sri Lanka: Department of Elections. p. 5. Archived from the original (PDF) on 4 March 2010.
↑ 9.0 9.1 "Parliamentary General Election - 2004 - Preferences" (PDF) . Rajagiriya, Sri Lanka: Department of Elections. p. 199. Archived from the original (PDF) on 4 March 2010.
↑ "Part I : Section (I) — General - Government Notifications - The Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF) . இலங்கை அரச வர்த்தமானி Extraordinary . No. 1649/2. Colombo, Sri Lanka. 12 April 2010. p. 4A. பார்க்கப்பட்ட நாள் 25 April 2010 .
↑ "General Elections 2010 -- Preferential Votes" . Sunday Times (Colombo, Sri Lanka). 11 April 2010. http://www.sundaytimes.lk/100411/News/page1.pdf . பார்த்த நாள்: 25 September 2020 .
↑ "Part I : Section (I) — General - Government Notifications - The Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF) . இலங்கை அரச வர்த்தமானி Extraordinary . No. 1928/3. Colombo, Sri Lanka. 19 August 2015. p. 5A. பார்க்கப்பட்ட நாள் 20 August 2015 .
↑ "Ranil tops with over 500,000 votes in Colombo" . Daily Mirror (Colombo, Sri Lanka). 19 August 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo . பார்த்த நாள்: 25 September 2020 .
↑ "Thilanga appointed Deputy Speaker" . Daily Mirror (Colombo, Sri Lanka). 1 September 2015. http://www.dailymirror.lk/85591/thilanga-appointed-deputy-speaker . பார்த்த நாள்: 25 September 2020 .
↑ "Thilanga appointed Deputy Speaker" . Ceylon Today (Colombo. Sri Lanka). 1 September 2015 இம் மூலத்தில் இருந்து 23 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150923202034/http://www.ceylontoday.lk/16-102533-news-detail-thilanga-appointed-deputy-speaker.html .
↑ "Part I : Section (I) — General - Government Notifications - Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF) . இலங்கை அரச வர்த்தமானி Extraordinary . No. 2187/26. Colombo, Sri Lanka. 8 August 2020. p. 5A. பார்க்கப்பட்ட நாள் 9 August 2020 .
↑ "General Election 2020: Preferential votes of Vanni District" . Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201027100600/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-vanni-district . பார்த்த நாள்: 25 September 2020 .
↑ டி. பி. எஸ். ஜெயராஜ் (8 August 2020). "TNA suffers electoral setback in North and East polls" . The Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/opinion/TNA-suffers-electoral-setback-in-North-and-East-polls/172-193440 . பார்த்த நாள்: 25 September 2020 .
↑ "List of candidates and preferential votes in Sri Lanka 2024 election" . EconomyNext . 15 நவம்பர் 2024 இம் மூலத்தில் இருந்து 21 நவம்பர் 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20241121054933/https://economynext.com/list-of-candidates-and-preferential-votes-in-sri-lanka-2024-election-188007/ .
↑ "Parliamentary General Election - 2010 - Vanni Preferences" (PDF) . Rajagiriya, Sri Lanka: Department of Elections. Archived from the original (PDF) on 13 May 2010.
↑ Jayakody, Pradeep (28 August 2015). "The Comparison of Preferential Votes in 2015 & 2010" . Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/85309/the-comparison-of-preferential-votes-in-2015-2010 . பார்த்த நாள்: 25 September 2020 .
↑ "General Election Preferential Votes" . Daily News (Colombo Sri Lanka, Sri Lanka): p. 2. 8 August 2020. http://www.dailynews.lk/2020/08/08/political/225317/general-election-preferential-votes . பார்த்த நாள்: 25 September 2020 .