செஹரா (தலைக்கு அணியும் ஆடை)

செஹ்ரா அணிந்துள்ள ஒரு மணமகன்.

ஒரு செஹரா'அல்லது செஹ்ரோ அல்லது முண்டவல்யா[1] அல்லது பாசிகம்[2] என்பது இந்திய துணைக்கண்டத்தில் திருமணங்களின் போது மணமகன் (அல்லது சில சமயங்களில் மணமகள் கூட) நெற்றியில் அணியும் ஒரு மாலை/கிரீடம். வங்காளதேசம், இந்தியா மற்றும் பாக்கித்தான் போன்ற நாடுகளில் மணமகன் முகத்தில் தொங்கும் மாலைகளைப் வடிவமைப்பை உள்ளடக்கியும் இருக்கும்.[3] நாட்டின் பிற பகுதிகளை விட வட இந்தியாவில் அவை மிகவும் முக்கியமாக அணியப்படுகின்றன. அவை தீயவர்களின் வார்வையைத் தடுக்கும் நோக்கம் கொண்டவையாகவும், மணமகனும், மணமகளும் திருமணத்திற்கு முன்பு ஒருவரையொருவர் பார்க்கக்கூடாது என்பதற்காகவும் இது அணியப்படுகிறது.

பெயர்க் காரணம்

[தொகு]

செஹ்ரா என்ற வார்த்தை சமசுகிருத வார்த்தையான "சீர்சாகரா" (शीर्षहार) என்பதிலிருந்து உருவானது.[4] அதாவது தலையை அலங்கரிப்பதற்கான மாலை எனப் பொருள். செஹ்ரா என்ற வார்த்தை இந்து சமய சீர்திருத்தவாதியாதியான சூர்தாசரின் பிராஜ் கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.[4]

  1. Untracht, Oppi (February 1997). Traditional Jewelry of India (in ஆங்கிலம்). Harry N. Abrams. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8109-3886-1.
  2. Brown, Charles Philip (1903). "A Telugu-English Dictionary. New ed., thoroughly rev. and brought up to date...2nd ed". dsal.uchicago.edu. பார்க்கப்பட்ட நாள் 2023-03-23.
  3. "Sehra: Traditional Headdress For Indian Groom". Utsavpedia. 18 June 2014.
  4. 4.0 4.1 Dasa, Syamasundara (1965–1975). "Hindi sabdasagara". dsal.uchicago.edu. பார்க்கப்பட்ட நாள் 2023-03-13.