Dr. சேகர் கொய்ராலா Shekhar Koirala | |
---|---|
डा. शेखर कोईराला | |
நேபாள அரசியலமைப்பு நிர்ணய மன்றம் உறுப்பினர், மொரங் மாவட்டம் தொகுதி எண் 7 | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2013 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஆகத்து 25, 1950 பிரத்நகர், மொரங் மாவட்டம் |
அரசியல் கட்சி | நேபாளி காங்கிரஸ் |
துணைவர் | பூனம் கொய்ராலா |
பெற்றோர் |
|
முன்னாள் கல்லூரி | மகேந்திர மொராங்கு வளாகம் |
இணையத்தளம் | shekharkoirala |
சேகர் கொய்ராலா (Shekhar Koirala) நேபாளி காங்கிரசு அரசியல்வாதியும் 2 ஆவது நேபாள அரசியலமைப்பு சபையின் உறுப்பினரும் ஆவார்.
மொரங்கு மாவட்டத் தொகுதி எண் 6 ஐப் சேகர் கொய்ராலா பிரதிநிதித்துவப்படுத்தினார். அரசியல் நகரமான பிரத்நகரின் மேற்குப் பகுதியைக் கொண்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு நேபாள அரசியல் நிர்ணய சபை தேர்தலில் இப்பகுதியிலிருந்து சேகர் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] முன்னதாக இவர், தன்னாட்சி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகமான பி.பி. கொய்ராலா சுகாதார அறிவியல் நிறுவனத்தில் துணைவேந்தராக பணியாற்றினார். [2] நேபாளி காங்கிரசு மத்திய செயற்குழு உறுப்பினர் பதவிக்கு அதிக வாக்குகளைப் பெற்றவர் என்ற சிறப்பும் சேகருக்கு உண்டு. [3]
மருத்துவர் கொய்ராலா கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்குப் பிறகு நோர்விக் சர்வதேச மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். [4] இவரது மாமா பிபி கொய்ராலா கைது செய்யப்பட்டபோது, நேபாளத்தில் தீவிர அரசியலுக்கு திரும்புமாறு இந்திய பிரதமர் மொரார்சி தேசாய் இவருக்கு கடிதம் அனுப்பினார். [1]
கொய்ராலா குடும்பத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளான தந்தை கேசவ் பிரசாத் கொய்ராலா மற்றும் தாய் நோனா கொய்ராலா ஆகியோருக்கு 1950 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 25 அன்று சேகர் கொய்ராலா பிறந்தார். [1]
தொழிலில் இவர் ஒரு மருத்துவர். பிர் மருத்துவமனை, பி.பி. கொய்ராலா சுகாதார அறிவியல் நிறுவனம் மற்றும் கோசி மண்டல மருத்துவமனை ஆகியவற்றில் சேகர் கொய்ராலா பணியாற்றியுள்ளார். [1]