சேகர் தத் | |
---|---|
4th [[சட்டீஸ்கர் ஆளுநர்]] | |
பதவியில் 23 சனவரி 2010 – 19 ஜூன் 2014 | |
முன்னையவர் | ஈ. சீ. இ. நரசிம்மன் |
பின்னவர் | ராம் நரேஷ் யாதவ் (செயல்) |
தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் | |
பதவியில் 27 ஜூன் 2007 - 2009 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
31வது இராணுவ பாதுகாப்புச் செயலாளர் | |
பதவியில் 29 ஜூலை 2005 – 31 ஜூலை 2007 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | அஜய் விக்ரம் சிங் |
பின்னவர் | விஜய் சிங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 திசம்பர் 1945 |
முன்னாள் கல்லூரி | சுவாசேனா பல்கலைக்கழகம் |
இணையத்தளம் | www.shekhardutt.in |
Military service | |
பற்றிணைப்பு | இந்தியா |
கிளை/சேவை | இந்தியத் தரைப்படை |
சேவை ஆண்டுகள் | 1970–1971 |
தரம் | இந்தியா: குறுகிய கால அதிகாரி |
போர்கள்/யுத்தங்கள் | 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர் |
சேகர் தத் (Shekhar Dutt) என்பவர் இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் மேனாள் ஆளுநர் ஆவார். இவர் முன்னதாக இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் உட்பட பல்வேறு அதிகாரத்துவ பதவிகளில் பணியாற்றி உள்ளார்.[1] தற்போது இவர் தில்லியிலிருந்து வெளிவரும் கடல் மற்றும் கடற்கரை சார்ந்த கடல்சார் மாதாந்திர இதழின் ஆலோசகராக உள்ளார்.[2]
தத் மத்தியப் பிரதேச இந்திய ஆட்சிப் பணியில் 1969ஆம் ஆண்டு தொகுதியினைச் சார்ந்தவர். தத் இந்திய இராணுவத்தில் குறுகிய கால ஆணைய அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். 1971ல் இந்தியா-பாக்கிஸ்தான் போரின் போது பணியாற்றியதற்காக வீரத்திற்கான சேனா பதக்கம் வழங்கப்பட்டது. பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் நலத்துறையின் முதன்மைச் செயலர் மற்றும் பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் ஆகிய துறைகளின் முதன்மைச் செயலர் உட்பட மத்தியப் பிரதேச அரசாங்கத்தில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
இந்தியச் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தில் ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி துறையின் செயலாளராக தத் நியமிக்கப்பட்டார். தலைமை இயக்குநராக இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் தத் முக்கிய பங்காற்றி ஆப்பிரிக்க-ஆசிய விளையாட்டுப் போட்டியினை இந்திய மாநகரான ஐதராபாத்தில் நவம்பர் 2003-ல் நடத்திட முக்கிய பங்காற்றினார்.[3]
இவர் இறுதியில் பாதுகாப்பு உற்பத்தித் துறையில் இணைச் செயலாளராக ஆனார். பின்னர் 2005-ல் இந்தியாவின் பாதுகாப்புச் செயலாளராகப் பொறுப்பேற்றார். ஜூலை 2007-ல், தத் பாதுகாப்பு செயலாளராக இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் இரண்டு ஆண்டுக் காலத்திற்குத் தேசிய துணைப் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.[4]
செப்டம்பர் 2009-ல், டிசேல்ஸ் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் குழுவில் தத் நியமிக்கப்பட்டார். [5]
23 சனவரி 2010 அன்று, இவர் சத்தீசுகரின் ஆளுநராகப் பொறுப்பேற்றார். 18 ஜூன் 2014 அன்று பதவியினை தானாக விலகும் வரை அந்தப் பதவியிலிருந்தார்.[6]
11-பிப்ரவரி-2014 அன்று ஸ்ரீ சேகர் தத் எழுதிய நூல், “தற்கால இந்தியா பற்றிய பிரதிபலிப்புகள்”. இதனை இந்தியக் குடியரசுத் தலைவர் வெளியிட்டார்.[10]
வார்ப்புரு:Governors of Chhattisgarh