சேக் முசுதபா கமல் | |
---|---|
சம்மு காசுமீர் அரசாங்க அமைச்சர் | |
பதவியில் 1983–2002 | |
சம்மு காசுமீர் சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1987–2002 | |
தொகுதி | குல்மார்க் சட்டமன்றத் தொகுதி |
சம்மு காசுமீர் சட்டப்பேரவைக் குழு உறுப்பினர் | |
பதவியில் 1983–1987 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டுக் கட்சி |
உறவுகள் | பாரூக் அப்துல்லா (சகோதரர்) உமர் அப்துல்லா (மருமகன்) |
பெற்றோர் | சேக் அப்துல்லா (தந்தை) அக்பர் ஜெகன் அப்துல்லா (தாய்) |
சேக் முசுதபா கமல் (Sheikh Mustafa Kamal) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சம்மு & காசுமீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர்களில் ஒருவராக செயல்பட்டார்.[1] 1983, 1987 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட மாநில அமைச்சரவையில் பணியாற்றினார்.[2]
காசுமீர் தலைவர் சேக் அப்துல்லாவின் மகன், சம்மு காசுமீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் சகோதரர், முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் மாமா என்றும் சேக் முசுதபா கமல் அறியப்படுகிறார். மருத்துவப் பட்டதாரியான இவர் 1962 ஆம் ஆண்டில் செய்ப்பூர் இராசத்தான் சவாய் மான்சிங் மருத்துவக் கல்லூரியில் மருத்துவத்தில் பட்டம் பெற்றார்.