சேரன் | |
---|---|
சேரன் | |
![]() | |
தாய்மொழியில் பெயர் | சேரன் |
பிறப்பு | திசம்பர் 12, 1965 கொழிஞ்சிப்பட்டி, மேலூர், மதுரை, தமிழ்நாடு |
பணி | நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1997–தற்போது வரை |
பெற்றோர் | பாண்டியன், கமலா |
விருதுகள் | மூன்று (தேசிய விருதுகள்) |
வலைத்தளம் | |
www |
சேரன் (Cheran, பிறப்பு: திசம்பர் 12, 1965) என்பவர் தமிழ்நாட்டை திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். இவர் இயக்கிய வெற்றிக் கொடி கட்டு (2000), ஆட்டோகிராப் (2004) மற்றும் தவமாய் தவமிருந்து (2005) போன்ற திரைப்படங்கள் தேசிய திரைப்பட விருதுகள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சொல்ல மறந்த கதை (2000), தவமாய் தவமிருந்து (2005), பொக்கிசம் (2009), முரண் (2011) போன்ற பல திரைப்பட ங்களிலும் கதாநாகனாக நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் 3 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.
சேரன் மதுரை மாவட்டம், மேலூர், கொழிஞ்சிப்பட்டி என்னும் கிராமத்தில் திசம்பர் 12, 1965 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை பாண்டியன் வெள்ளலூர் உள்ள திரையரங்கத்தில் படம் ஓட்டுநராக பணி புரிந்தார். தாயார் கமலா தன் கிராமத்திலே தொடக்க பள்ளி ஆசிரியை ஆக வேலை பார்த்தார்.
இவருடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். சிறிய வயதில் நாடகங்களில் நடித்தும் இருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில், சூன் 19, 2011 அன்று நடந்த தேர்தலில், போட்டியின்றித் தேர்வுச் செய்யப்பட்ட இரு துணைத்தலைவர்களில் சேரனும் ஒருவர் ஆவார்.
திரைப்படங்களில் தனது வாழ்க்கையைத் தொடர சென்னை வந்தார். ஆரம்பத்தில் அவர் சில திரைப்படங்களில் தயாரிப்பு மேலாளராக பணி புரிந்தார். கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் புரியாத புதிர் என்ற திரைப்படத்தில் முதன் முதலாய் உதவி இயக்குநராக பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து சேரன் பாண்டியன் முதல் நாட்டாமை வரை அவருடன் இணைந்து பணியாற்றினார். பின்னர் கமல்ஹாசனுடன் இணைந்து மகாநதி படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
உதவி இயக்குநராக இருந்த அவர் பார்த்திபன் மற்றும் மீனா நடித்த பாரதி கண்ணம்மா என்னும் திரைப்படத்தை இயக்கினார். இது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கினாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து அதை தொடர்ந்து பொற்காலம் (1999), வெற்றிக் கொடி கட்டு (2000), பாண்டவர் பூமி (2001) போன்ற சமூக அவலங்களை சித்தரித்தே திரைப்படம் இயக்கினார். இவருடைய படங்கள் யாவும் சமூக மாற்றத்தையும், சாதாரண தமிழ் நாட்டுப்புற மக்களின் வாழ்வையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. அதை தொடர்ந்து அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது (2006), ஆடும் கூத்து (2007), முரண் (2011) போன்ற திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.
2002 ஆம் ஆண்டு இயக்குநர் தங்கர் பச்சான் என்பவர் இயக்கிய சொல்ல மறந்த கதை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்புத்திறன் பரவலாக பேசப்பட்டு பாராட்டும் பெற்றார். பின்னர் பொக்கிசம் என்ற படத்தில் நடிப்பதாக இருந்து பின்னர் கைவிடப்பட்டது. நடிகர் விக்ரம் நடிக்க ஆட்டோகிராப் படம் தயாரானது. அழைப்புக் கடிதம் பிரச்சனையால் அதுவும் கைவிடப்பட்டு, பின்னர் அதில் இவரே கதாநாயகனாக நடித்து மற்றும் இயக்கவும் செய்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு 2004 இல் ஆரம்பித்த பொக்கிசம் இவர் நடிப்பில் 2009 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அதை தொடர்ந்து பிரிவோம் சந்திப்போம் (2008), ராமன் தேடிய சீதை (2008), யுத்தம் செய் (2011), திருமணம் (2019) போன்ற பல திரைப்படங்களில் நடிகராக நடித்தார்.
ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய சேரன் "இலங்கைத் தமிழர்களுக்காக இங்கே, நாங்கள் எல்லாம், திரையுலகமே குரல் கொடுத்துள்ளோம். .. எங்களுடைய எல்லாவற்றையும் இழந்துவிட்டுப் போராடியுள்ளோம்... ஏன் இதையெல்லாம் பண்ணினோம் என்று அருவருப்பாகவுள்ளது..."[1] என்று முறையற்ற டிவிடி மற்றும் இணையப் பதிவேற்றம் செய்பவர்களாக இலங்கைத் தமிழர்களைக் குறிப்பிட்டது சர்ச்சையை உருவாக்கியது.[2] பின்னர், தான் குறிப்பிட்டது குறிப்பிட்ட சிலரைத்தான் ஒட்டுமொத்த இலங்கைத்தமிழர்களையும் அல்ல என சேரனால் மறுப்பு வெளியிடப்பட்டது.[3] ஆயினும், இலங்கைத் தமிழர்கள் சார்பில் சேரன் போராட்டத்தையும் முறையற்ற டிவிடி விடயத்தையும் தொடர்புபடுத்தியிருக்கக் கூடாது என்றும், வியாபாரத்தையும் போராட்டத்தையும் சேர்க்க வேண்டாம் என்றும், அல்லது இலங்கைத் தமிழர்களுக்காக என்பதில் சில அல்லது குறிப்பிட்ட இலங்கைத் தமிழர்களுக்காக என தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றும் பதிலளிக்கப்பட்டது.[4][5]
ஆண்டு | திரைப்படம் | காதாபாத்திரம் | பங்கு | குறிப்புகள் | |||
---|---|---|---|---|---|---|---|
இயக்குநர் | நடிகர் | எழுத்தாளர் | தயாரிப்பாளர் | ||||
1997 | பாரதி கண்ணம்மா | ![]() |
![]() |
||||
பொற்காலம் | புகைப்படக்காரர் | ![]() |
![]() |
||||
1998 | தேசிய கீதம் | ![]() |
![]() |
||||
2000 | வெற்றிக் கொடி கட்டு | ![]() |
![]() |
||||
2001 | பாண்டவர் பூமி | ![]() |
![]() |
||||
2002 | சொல்ல மறந்த கதை | சிவதாணு | ![]() |
||||
2004 | ஆட்டோகிராப் | செந்தில் | ![]() |
![]() |
![]() |
![]() |
|
2005 | தவமாய் தவமிருந்து | ராமலிங்கம் முத்தையா | ![]() |
![]() |
![]() |
||
2006 | அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது | ![]() |
|||||
2007 | மாயக்கண்ணாடி | Kumar | ![]() |
![]() |
![]() |
||
ஆடும் கூத்து | ஞானசேகரன் | ![]() |
![]() |
||||
2008 | பிரிவோம் சந்திப்போம் | நடேசன் | ![]() |
||||
ராமன் தேடிய சீதை | வேணுகோபால் | ![]() |
|||||
2009 | பொக்கிசம் | லெனின் | ![]() |
![]() |
![]() |
||
2011 | யுத்தம் செய் | ஜெ. கிருஷ்ணமூர்த்தி | ![]() |
||||
முரண் | நந்தா | ![]() |
![]() |
||||
2013 | சென்னையில் ஒரு நாள் | சத்யமூர்த்தி | ![]() |
||||
மூன்று பேர் மூன்று காதல் | குணசேகர் | ![]() |
|||||
2014 | கதை திரைக்கதை வசனம் இயக்கம் | அவராகவே | ![]() |
||||
2015 | ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை | ![]() |
![]() |
![]() |
பாடலாசிரியர் | ||
2016 | ராஜாதி ராஜா | ![]() |
![]() |
![]() |
தெலுங்குத் திரைப்படம் | ||
2019 | திருமணம் | அறிவுடைநம்பி | ![]() |
![]() |
![]() |
||
2020 | மிக மிக அவசரம் | பாடலாசிரியர்[6] | |||||
2020 | ராஜாவுக்கு செக் | ராஜா | ![]() |
ஆண்டு | நிகழ்ச்சி | பாத்திரம் | தொலைக்காட்சி | குறிப்பு |
---|---|---|---|---|
2019 | பிக் பாஸ் தமிழ் 3 | போட்டியாளராக |
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)