![]() சாசாராம் நகரில் அமைந்துள்ள சேர் சா சூரியின் கல்லறை . | |
இடம் | சாசாராம், பீகார் |
---|---|
வடிவமைப்பாளர் | மிர் முகம்மது அலிவால் கான் |
வகை | இந்திய-இசுலாமியக் கட்டிடக்கலை |
கட்டுமானப் பொருள் | மணற்கல் |
உயரம் | 122 அடி |
முடிவுற்ற நாள் | 16 ஆகஸ்ட் 1545 |
அர்ப்பணிப்பு | சேர் சா சூரி |
சேர் சா சூரியின் கல்லறை (Tomb of Sher Shah Suri) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தின் சாசாராம் நகரில் உள்ளது. முகலாயப் பேரரசை தோற்கடித்து வட இந்தியாவில் சூர் பேரரசை நிறுவிய பீகாரைச் சேர்ந்த பஷ்தூன் பேரரசர் சேர் சா சூரி நினைவாக இந்த கல்லறை கட்டப்பட்டது. ரபி உல் அவ்வலின் 952 வருடத்தின் பத்தாவது நாளில், அல்லது பொ.ச. 1545 மே 13 அன்று கலிஞ்சர் கோட்டையில் தற்செயலான ஒரு குண்டு வெடிப்பில் சேர் சா சூரி இறந்தார்.[1][2]
இந்தக் கல்லறை இந்திய-இசுலாமியக் கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இது கட்டிடக் கலைஞர் மிர் முகம்மது அலிவால் கான் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, 1540க்கும்ம் 1545க்கும் இடையில் கட்டப்பட்டது.[3] கிட்டத்தட்ட சதுரமாக இருக்கும் ஒரு செயற்கை ஏரியின் நடுவில் நிற்கும் இந்த சிவப்பு மணற்கல் கல்லறை (122 அடி உயரம்) இந்தியாவின் இரண்டாவது தாஜ் மகால் என்று அழைக்கப்படுகிறது. கல்லறையைச் சுற்றியுள்ள ஏரி சுர் வம்சத்தால் ஆப்கானிஸ்தான் சுல்தான்களின் கட்டிடக்கலை வளர்ச்சியாகக் காணப்படுகிறது.[4]
இந்த கல்லறை சேர் சாவின் வாழ்நாளிலும், அவரது மகன் இஸ்லாம் ஷாவின் ஆட்சியிலும் கட்டப்பட்டது. சேர் சா சூரியின் இறப்புக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு, 1545 ஆகஸ்ட் 16 ஆம் தேதி நிறைவடைந்ததாக ஒரு ஒரு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.[5] [6]