இந்து சமயம் தொடர்பான கட்டுரை |
இந்து சமயம் |
---|
![]() |
![]() |
சேவற்கொடி என்பது தமிழ் கடவுள் முருகப்பெருமானின் படைகளின் கொடியாகும்.[1][2]தமிழ் இலக்கியங்கள் முருகப்பெருமானை சேவற் கொடியோன் என்று குறிப்பிடுகின்றன.[3]
முருகப்பெருமான் சூரபதுமன் எனும் அசுரனுடன் போர் புரியுமிடத்து, அசுரன் முருகப்பெருமானிடமிருந்து தப்பிக்கும் வழிதேடி தனது மாயையால் மாமரமாக மாறி நின்றான். இதை அறிந்த முருகப்பெருமான் தன் கூர் வேலால் அசுரனை இரண்டாக பிளந்தார். அசுரன் சாகும் தருவாயில் வந்திருப்பது ஈசன் மகன் என்று உணர்ந்து தன் தவறை மன்னிக்கும் படி வேண்டினான். அசுரன் தான் என்றும் முருகப்பெருமானுடன் தங்கியிருக்க வேண்டி நின்றான்.[4] குழந்தை மனம் கொண்ட கந்தபெருமான் அசுரனின் தவறை மன்னித்து இருகூறாய் பிளந்த அசுரனின் ஒரு பாகத்தை மயிலாகவும், மற்றொரு பாகத்தை சேவலாகவும் மாற்றி அருள் புரிந்தான்.[5]மயிலை தன் வாகனமாகவும், சேவலை தன் கொடியிலும் ஏற்று அருள் புரிந்தான்.[6]இவ்வாறு கந்த புராணத்தில் சேவற்கொடியின் தோற்றம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
செந்தூர் தல புராணம்[[1]]