சைதி பாடல்கள் என்பது இந்து நாட்காட்டியின் முதல் மாதமான சைத்ராவை வரவேற்கும் விதமாக இந்திய துணைக்கண்டத்திலிருந்து தோன்றிய பாரம்பரிய மற்றும் பொதுவான இசை வடிவத்தையும் கலந்த கலவையில் பாடப்படும் பாடல்கள் ஆகும்.[1][2] இந்த பாடல்கள் ஆங்கில மார்ச்/ஏப்ரல் மாதத்தில் ஸ்ரீ ராம நவமியின் போது வழங்கப்படுகின்றன. இது இந்துஸ்தானி பாரம்பரிய இசையின் வடிவத்தின் கீழ் வருகிறது.[3] பாடல்களில் பொதுவாக ராம என்ற பெயர் இருக்கும்.மேலும் பாடல்-உரையில் உள்ள நயிகா அல்லது பெண் கதாநாயகி தனது காதலனை சந்திக்க நினைவூட்டும் வகையிலும், புதிய பூக்கள் மற்றும் பழங்களின் தோற்றத்தை பற்றியும் அடிக்கடி விவரிக்கின்றன.
இது பாடலின் ஒரு பகுதியாக இருக்கவேண்டிய அவசியமில்லை, ஆனால் ஒரு நிறுத்தற்குறியாகவோ, ஆச்சரிய குறியாகவோ அல்லது எளிமையான உச்சரிப்பு சுவைக்காகவோ பயன்படுத்தப்படுகிறது. ராம நவமி அல்லது சைத்ரா மாதத்தின் ஒன்பதாம் நாளில் ராமர் பிறந்ததால் இந்தச் சொல் சேர்ப்பு உள்ளது என்றும் கருதலாம்.
இது கசாரி, ஹோரி மற்றும் சவானி போன்ற காலநிலைகளின் போது பாடப்படும் பாடல்களின் வரிசையில் வருகிறது, மேலும் இது பாரம்பரியமாக உத்தரபிரதேசத்தின் பெரும்பாலான கிராமங்கள் மற்றும் பனாரஸ், மிர்சாபூர், மதுரா மற்றும் அலகாபாத் போன்ற நகரங்களில் பாடப்படுகிறது: மட்டுமல்லாமல் பீகாரின் போஜ்பூர் பகுதிகளில் கூட பாடப்படுகிறது . சைதியின் பிரபலமான பாடகிகளில் கிரிஜா தேவியும் ஒருவர்.