சைபுதீன் நசுத்தியோன் இசுமாயில் Yang Berhormat YB Tuan Saifuddin Nasution Ismail | |
---|---|
![]() | |
மலேசிய உள்துறை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 திசம்பர் 2022 | |
ஆட்சியாளர் | மாமன்னர் அப்துல்லா |
பிரதமர் | அன்வர் இப்ராகீம் |
தொகுதி | செனட்டர் |
மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சர் | |
பதவியில் 2 சூலை 2018 – 24 பிப்ரவரி 2020 | |
தொகுதி | கூலிம்-பண்டார் பாரு மக்களவைத் தொகுதி |
பொதுச் செயலாளர் மக்கள் நீதிக் கட்சி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 25 நவம்பர் 2016 | |
பதவியில் 31 சனவரி 2010 – 13 அக்டோபர் 2014 | |
பொதுச் செயலாளர் பாக்காத்தான் அரப்பான் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1 மார்ச் 2020 | |
செனட்டர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 டிசம்பர் 2022 | |
கூலிம்-பண்டார் பாரு மக்களவைத் தொகுதி | |
பதவியில் 9 டிசம்பர் 2018 – 19 நவம்பர் 2022 | |
பெரும்பான்மை | 4,860 (2018) |
மாச்சாங் மக்களவைத் தொகுதி | |
பதவியில் 8 மார்ச் 2008 – 5 மே 2013 | |
பெரும்பான்மை | 1,460 (2008) |
பந்தாய் செரஜாக் சட்டமன்றத் தொகுதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 9 மே 2018 | |
பெரும்பான்மை | 10,716 (2018) |
லூனாஸ் சட்டமன்றத் தொகுதி | |
பதவியில் 29 நவம்பர் 2000 – 21 மார்ச் 2004 | |
பெரும்பான்மை | 530 (2000) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | Saifuddin Nasution bin Ismail 7 திசம்பர் 1963 சிங்கப்பூர் |
குடியுரிமை | மலேசியர் |
அரசியல் கட்சி | அம்னோ (1995–1999) பி.கே.ஆர் (1999 தொடக்கம்) |
பிற அரசியல் தொடர்புகள் | பாரிசான் (1995–1999) பாக்காத்தான் (2008–2015) பாக்காத்தான் அரப்பான் (2015 தொடக்கம்) |
துணைவர் | நோர்யாத்தி மூசா |
முன்னாள் மாணவர் | மலேசிய புத்ரா பல்கலைக்கழகம் துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகக் கல்லூரி[1] |
பணி | அரசியல்வாதி |
முகநூலில் சைபுதீன் நசுத்தியோன் இசுமாயில் | |
டத்தோ ஸ்ரீ சைபுதீன் நசுத்தியோன் இசுமாயில் (ஆங்கிலம்; மலாய்: Saifuddin Nasution bin Ismail; சீனம்: 赛夫丁纳苏迪安) (பிறப்பு: 7 திசம்பர் 1963) என்பவர் அன்வார் இப்ராகிம் அமைச்சரவையில் 2022 திசம்பர் மாதம் 3-ஆம் தேதி மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சர் (Minister of Home Affairs Malaysia) பதவியில் நியமிக்கப்பட்டவர்.
2022 திசம்பர் மாதத்தில் அன்வார் இப்ராகிம் அமைச்சரவை அமைக்கப்பட்ட போது இவர் மலேசிய மக்களவையில் செனட்டராக நியமிக்கப்பட்டார்.
இவர் மலேசிய நாடாளுமன்றம்; மலேசிய மாநிலங்களின் சட்டமன்றங்கள் ஆகியவற்றில் வகித்த உறுப்பினர் பதவிகள்:
இவர் பாக்காத்தான் அரப்பான் (Pakatan Harapan) (PH) கூட்டணியின் ஓர் அங்கமான மக்கள் நீதிக் கட்சியின் (People's Justice Party Malaysia) (PKR) உறுப்பினர் ஆவார். அவர் சனவரி 2010 முதல் அக்டோபர் 2014-இல் பதவி துறப்பு செய்யும் வரை மக்கள் நீதிக் கட்சியின் பொதுச் செயலாளராகவும்; மீண்டும் நவம்பர் 2016 முதல் மார்ச் 2020 முதல் பாக்காத்தான் அரப்பான் கூட்டணியின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.[6]
சைபுதீன் நசுத்தியோன் இசுமாயில் தொடக்கத்தில் ஆளும் அம்னோ கட்சியின் இளைஞர் பிரிவில் உறுப்பினராக இருந்தார். ஆனாலும் 1999-இல் அதன் உதவிச் செயலாளர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அன்வர் இப்ராகீம் நண்பரான சைபுதீன் பின்னர் கெஅடிலான் (KeADILan) கட்சிக்கு மாறினார். இந்தக் கட்சி பின்னர் காலத்தில் மக்கள் நீதிக் கட்சியின் (People's Justice Party Malaysia) (PKR) என மாற்றம் கண்டது.[7][8]