சைமன் கோல்மன் (Simon Coleman) ஒரு பிரித்தானிய மானிடவியலாளர் ஆவார். டொராண்டோ பல்கலைக்கழகத்தில் மத ஆய்வுத் துறையில் வேந்தராக யாக்மேன் இருக்கை பேராசிரியராக பணியாற்றுகிறார். அதே நேரத்தில் இங்கிலாந்திலுள்ள துர்காம் பல்கலைக்கழகம், சசெக்சு பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிலையங்களிலும் கற்பித்தல் பணியை செய்தார். ராயல் மானுடவியல் நிறுவனத்தின் பத்திரிகையிலும் ஆசிரியராக இருந்தார் [1]. கவர்ந்திழுக்கும் கிறித்துதவம் மற்றும் செழிப்பான இறையியல் [2] பற்றிய ஆய்வுகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக ஐரோப்பாவில் நம்பிக்கையூட்டும் சொல் இயக்கத்தில் கவனம் செலுத்துகிறார் [3]. கேம்பிரிட்ச்சு பல்கலைக்கழகத்தில் படித்து முனைவர் பட்டமும் பெற்றார் [1].
Sir,