சையத் மெகபூப் சா காத்ரி (Sayed Mehboob Shah Qadri) இந்திய நாட்டின் மகாராட்டிரா மாநிலத்தின் புனேவைச் சேர்ந்த ஒரு சமூக சீர்திருத்தவாதி ஆவார். சையத்பாய் என்று பிரபலமாக அறியப்படுகிறார். [1] [2] 2020 ஆம் ஆண்டில் சமூக சேவைகளில் இவர் ஆற்றிய பணிக்காக, இந்திய நாட்டின் நான்காவது உயரிய சிவிலியன் விருதான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. [3]
நான்கு வயதில், காத்ரியின் குடும்பம் அவரது சொந்த நகரமான தெலுங்கானா மாநிலம்ஐதராபாத்தில் இருந்து மகாராட்டிரா மாநிலம் புனேவுக்கு குடிபெயர்ந்தனர். இவருக்கு ஒரு சகோதரனும் நான்கு சகோதரிகளும் இருந்தனர். இவர் 13 வயதில் வேலை செய்யத் தொடங்கினார். இவருக்கு 20 வயதாக இருந்தபோது, அவரது சகோதரியின் விவாகரத்து, இவரை விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்காக வேலை செய்யத் தூண்டியது. இவர் சமூக சீர்திருத்தவாதியான கமீத் தல்வாயை சந்தித்து 1970 ஆம் ஆண்டு 2 மார்ச் மாதம் 22 ஆம் தேதி முசுலீம்களில் சமூக சீர்திருத்தங்களை ஊக்குவிக்கும் ஒரு அமைப்பான முசுலீம் சத்யசோதக் மண்டல் உடன் இணைந்து நிறுவினார். இசுலாமிய விவாகரத்து முறையான முத்தலாக் மூலம் கணவரால் விவாகரத்து செய்யப்பட்ட முசுலிம் பெண்களுக்கு இந்த அமைப்பு மறுவாழ்வு அளிக்கிறது. விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு நிதி உதவி, சட்ட உதவி மற்றும் தொழில் பயிற்சி ஆகியவற்றை வழங்குகிறது. ஐம்பது ஆண்டுகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளது . ஒவ்வொரு ஆண்டும் ஒரு சமூக சேவகர்க்கு கமீத் தல்வாய் சிம்ருதி புரசுகார் விருதை வழங்குகிறது. [4]
காத்ரிக்கு 2020 ஆம் ஆண்டில் சமூக சேவைகளில் இவர் ஆற்றிய பணிக்காக இந்தியாவின் நான்காவது உயரிய சிவிலியன் விருதான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது [5]