சையித் நூருல் அசன் | |
---|---|
![]() | |
9வது ஒன்றிய கல்வி, சமூக நலத்துறை, கலாச்சார அமைச்சர் | |
பதவியில் 24 மார்ச் 1972 – 24 மார்ச் 1977 | |
முன்னையவர் | சித்தார்த்த சங்கர் ராய் |
பின்னவர் | Pratap Chandra Chunder |
12th சோவியத் ஒன்றியத்துகான தூதர் | |
பதவியில் 1983–1986 | |
முன்னையவர் | வி. கே. அஹுஜா |
பின்னவர் | T.N. Kaul |
மேற்கு வங்காளத்தின் 12வது ஆளுநர் | |
பதவியில் 12 ஆகத்து 1986 – 1 மார்ச் 1989 | |
முன்னையவர் | Uma Shankar Dikshit |
பின்னவர் | டி. வி. ராஜேஸ்வர் |
ஒரிசாவின் 32வது ஆளுநர் | |
பதவியில் 20 நவம்பர் 1988 – 6 பெப்ரவரி 1990 | |
முன்னையவர் | Bishambhar Nath Pande |
பின்னவர் | வீர் யக்யா தத் சர்மா |
மேற்கு வங்காள ஆளுநர் | |
பதவியில் 6 பெப்ரவரி 1990 – 12 சூலை 1993 | |
முன்னையவர் | டி. வி. ராஜேஸ்வர் |
பின்னவர் | பி. சத்ய நாராயண் ரெட்டி (கூடுதல் பொறுப்பு) |
ஒரிசாவின் 34வது ஆளுநர் | |
பதவியில் 1 பெப்ரவரி 1993 – 31 மே 1993 | |
முன்னையவர் | வீர் யக்யா தத் சர்மா |
பின்னவர் | பி. சத்ய நாராயண் ரெட்டி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இலக்னோ, ஐக்கிய மாகாணம், பிரித்தானிய இந்தியா | 26 திசம்பர் 1921
இறப்பு | 12 சூலை 1993 கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா | (அகவை 71)
துணைவர் | நவாப்சாதி குர்ஷித் லகா பேகம் சாஹிபா |
பணி | வரலாற்றாசிரியர், அரசியல்வாதி, துதுவர் |
சையித் நூருல் அசன் (Saiyid Nurul Hasan, 26 திசம்பர் 1921 – 12 சூலை 1993) என்பவர் ஒரு இந்திய வரலாற்றாசிரியர் மற்றும் இந்திய அரசாங்கத்தில் மூத்த அரசியல்வாதி ஆவார். மாநிலங்களவை உறுப்பினரான இவர், இந்திய ஒன்றி அரசின் கல்வி, சமூக நலம், கலாச்சாரம் (1971-1977) ஆகிய துறைகளில் அமைச்சராக இருந்தார். மேலும் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவின் ஆளுநராக (1986-1993) இருந்தார்.[1][2][3]
அசன் இந்தியாவின் இலக்னோவில் பிறந்தார். இவர் ஐக்கிய மாகாணத்தின் தாலுக்தாரி ( மதாத்-இ மாஷ் ) குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் சையித் அப்துல் ஹசன் மற்றும் நூர் பாத்திமா பேகம் ஆகியோரின் மகனாவார். இவரது பெற்றோரின் பெயர்களை இணைத்து இவருக்கு பெயர் இடப்பட்டது. இவரது தந்தை ஒரு மாவட்ட தீர்வை அலுவலராகவும், பின்னர் ஐக்கிய மாகாணங்களின் காப்பாயத் தலைவராக இருந்தார். இவரது தாய்வழி தாத்தா சர் சையத் வசீர் ஹசன், அவத் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் முஸ்லீம் லீக்கின் நன்கு அறியப்பட்ட தலைவர், அவர் 1936 இல் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தார். இவரது தாய்வழி மாமா சையத் சஜ்ஜாத் ஜாஹீர், ஒரு வழக்கறிஞர் மற்றும் ஒரு சிறந்த மார்க்சிய சிந்தனையாளர். இன்னரு தாய்வழி மாமாவனா சையத் அலி ஜாஹீர், உத்தரபிரதேசத்தின் சட்ட அமைச்சராகவும் ஈரானுக்கான இந்திய தூதராகவும் இருந்த ஒரு வழக்கறிஞர்.
அசன் இலக்னோவில் உள்ள சியா சமயப் பள்ளியான சுல்தான் உல் மதரிசில் பயின்றார்.[4] பின்னர் கல்கத்தாவில் உள்ள லா மார்டினியர் ஆடவர் கல்லூரிக்குச் சென்றார்.[5] இவர் தனது பட்டப்படிப்பை அலகாபாத்தில் உள்ள முயர் மத்திய கல்லூரியில் முடித்தார். அங்கு இவர் பேராசிரியர் ஆர். பி. திரிபாதியின் மாணவராக இருந்தார். பின்னர் இவர் ஆக்ஸ்போர்டில் உள்ள புதுக் கல்லூரிக்குச் சென்றார். அங்கு இவர் முதுகலை பயின்று இந்திய வரலாற்றில் முனைவர் பட்ட ஆய்வை முடித்தார். ஆக்ஸ்போர்டில், ஆக்ஸ்போர்டு இந்தியா மஜ்லிஸின் தலைவராக இருந்தார்.[6]
இளம் வயதிலேயே, அசன் ராம்பூரின் நவாப் ராசா அலி கானின் மூத்த மகள் நவாப்சாதி குர்ஷித் லகா பேகம் சாகிபாவை அவர்களது குடும்பத்தினரின் ஏற்பாட்டின் பேரில் திருமணம் செய்து கொண்டார். நூருல் அசன் மற்றும் குர்ஷித் லக்கா இணையருக்கு இரு பிள்ளைகள் பிறந்தனர். அவர்களின் ஒரு மகனான சயீத் சிராஜுல் ஹசன் ஒரு சிறந்த இயற்பியலாளராவார். சயீத் சிராஜுல் ஹசன், பெங்களூரு இந்திய வானியற்பியல் கழகத்தின் இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றார். அசனின் ஒரு மகளான சயீதா. தலாத் பாத்திமா அசன், அமெரிக்காவில் ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோராக இருந்தார்.[7]
இலண்டனில் உள்ள ஓரியண்டல் அண்ட் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ் பள்ளியில் வரலாற்று விரிவுரையாளராக தனது கல்வியியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார், அதன் தலைவராகவும் இருந்தார். அலிகாரில் வரலாற்றுத் துறையின் ஆரம்ப ஆண்டுகளில் அதன் வளர்ச்சிக்கு இவர் பெரிதும் பங்களித்தார். பின்னர் இவர் பொதுச் செயலாளராகவும் பின்னர் இந்திய வரலாற்றுப் பேராயத்தின் தலைவராகவும் ஆனார். இவர் இலண்டனில் உள்ள ராயல் வரலாற்று சங்கம் மற்றும் ராயல் ஆசிய சங்கத்தின் ஃபெலோவாக இருந்தார்.
அசன் இடதுசாரி தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட மதச்சார்பின்மைவாதியாக இருந்தார். இவர் 1969 முதல் 1978 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 1971 முதல் 1977 வரை, இந்திய அரசாங்கத்தில் கல்வி, சமூக நலம், கலாச்சாரத்திற்கான ஒன்றிய அமைச்சராக (தனிப் பொறுப்புடன்) இருந்தார். இந்தியாவின் கல்வி அமைச்சராக இருந்தபோது, இவர் புது தில்லியில் இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழுவை நிறுவினார். புது தில்லியில் உள்ள இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் கல்கத்தா சமூக அறிவியல் ஆய்வு மையம் (1973) போன்ற இந்தியாவில் 27 சமூக அறிவியல் ஆய்வு நிறுவனங்களை அமைப்பதற்குப் பின்னணியில் சிற்பியாகவும் இருந்தார்.[8] இவர் அமைச்சராக இருந்தபோது, நாடாளுமன்றத்தின் சட்டத்தின்படி, ராம்பூர் ராசா நூலகத்தின் நிதி மற்றும் மேலாண்மை இந்திய அரசின் வசம் ஒப்படைக்கபட்டது. 1977 முதல் 1980 வரை இவர் புது தில்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வு மன்றத்தின் துணைத் தலைவராக இருந்தார்.[9]
இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பல இடதுசாரி ஆசிரியர்களின் பணி முன்னேற்றத் திட்டங்களை மேம்படுத்துவதில் இவர் கருவியாக இருந்தார். இது கல்வியின் அரசியல் சார்பின்மையை பாதித்தது. உயர்நிலைப் பள்ளி, ஜூனியர் கல்லூரி, இளங்கலை நிலைகளில் 10+2+3 கல்வி முறையைத் தொடங்குவதில் இவர் முக்கியப் பங்காற்றினார். இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட "சமத்துவத்தை நோக்கி: இந்தியாவில் பெண்களின் நிலை குறித்த குழுவின் அறிக்கை (1974-5)" நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதில் இவர் முக்கிய பங்கு வகித்தார்.[10] இந்த அறிக்கையில் இருந்த கருத்துகளே தில்லியில் பெண்கள் மேம்பாட்டு ஆய்வு மையம் நிறுவ அடிப்படையாக அமைந்தது. இவர் 1983 முதல் 1986 வரை சோவியத் ஒன்றியத்துக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றினார்.[11] பின்னர் 1986 முதல் 1989 வரை மேற்கு வங்க ஆளுநராக இருந்தார், பின்னர் மீண்டும் 1989 முதல் 1993 வரை ஆளுநராக இருந்தார். 1989ல் ஒடிசா ஆளுநராக இருந்தார். மேற்கு வங்க ஆளுநராக இருந்தபோது, இவர் கல்கத்தாவில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆசிய ஆய்வுக் கழகத்தை (1993) நிறுவினார். ஆய்வுக் கழகத்தின் முதல் தலைவராக இருந்தார்.[12]
1993 ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் உள்ள கல்கத்தாவில் தனது 71வது வயதில் ஆளுநர் பதவியில் இருந்தபோது சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தார்.
நூருல் ஹசன் கல்வி அறக்கட்டளை இவரது பெயரால் இயங்குகிறது.[13] கல்கத்தா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையின் நூருல் ஹசன் இருக்கை இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.
SHRI M. M. RAJENDRAN
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
NAME OF THE GOVERNORS OF Odisha