இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
சொத்துரிமை இடமாற்றச் சட்டம் 1882 |
---|
குறிப்பிட்ட நபர்கள் சொத்து மாற்றல் செய்வதை சீர் படுத்தும் சட்டத்தை அமலுக்கு கொண்டுவரும் பொருட்டு அமைக்கப்பட்ட சட்டம். | |
பிராந்திய எல்லை | இந்திய யூனியன் |
இயற்றப்பட்ட தேதி | 17 பிப்ரவரி 1882 |
ஆரம்பிக்கப்பட்ட தேதி | 01 ஜூலை 1882 |
சட்டப்பூர்வ வரலாறு | |
அறிமுகப்படுத்தியவர் | விட்லி ஸ்டோக்ஸ் |
முதல் வாசிப்பு | 1877 |
இரண்டாவது வாசிப்பு | 1882 |
நிலை: நடைமுறையில் |
சொத்துரிமை இடமாற்றச் சட்டம் 1882 இந்தியாவில் சொத்துக்கள் இடம் மாறுவதை ([./https://en.wikipedia.org/wiki/Property_law#Transfer_of_property transfer of property]) ஒழுங்குபடுத்தும் ஒரு இந்தியச் சட்டமாகும். இச்சட்டத்தில் பரிமாற்றம் மற்றும் அதனுடன் இணைந்த நிபந்தனைகள் பற்றிய குறிப்பிட்ட விதிகள் உள்ளன. இது ஜூலை 1, 1882 அன்று அமலுக்கு வந்தது.
இந்தச் சட்டத்தின் படி, 'சொத்து மாற்றல்' என்பது ஒரு நபர் தனது சொத்துக்களை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு அளிப்பதோ அல்லது தனக்கும் மற்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கும் சேர்த்து அளிப்பதோ ஆகும். பரிமாற்றச் செயல் தற்போதோ அல்லது எதிர்காலத்திலோ செய்யப்படலாம். தனிநபர், நிறுவனத்தையோ அல்லது சங்கத்தையோ அல்லது பல தனிநபர்களையோ உள்ளடக்கியிருக்கலாம். அசையாச் சொத்துகள் உட்பட எந்தவிதமான சொத்துகளும் இடம் மாற்றப்படலாம்.
சொத்து, பரவலாக பின்வருமாரு வகைப்படுத்தப்பட்டுள்ளது:
"அசையா சொத்துக்களில்([./https://en.wikipedia.org/wiki/Immovable_property Immovable property]) மரம், வளர்ந்து வரும் பயிர்கள் அல்லது புல் போன்றவை அடங்காது" என்று இச்சட்டம் விளக்குகிறது. பிரிவு 3 (26), பொதுக் கிளைகள் சட்டம், 1897, "அசையாச் சொத்து" என்பது நிலம், நிலத்திலிருந்து வரும் பலன்கள், பூமியோடு இணைந்திருக்கும் விஷயங்கள், அல்லது பூமியோடு நிரந்தரமாக இணைக்கப்பட்ட எதையும் உள்ளடக்கலாம் எனக் கூறுகிறது. மேலும், பதிவு சட்டம், 1908, 2 (6)
"அசையாச் சொத்து" நிலம், கட்டிடங்கள், பரம்பரைக் கொடுப்பனவுகள், வழிகளுக்கு உள்ள உரிமைகள், விளக்குகள், படகுகள், மீன்பிடித் துறை சார்ந்தவைகள் அல்லது பூமியில் இருந்து வரும் வேறு எந்த பலன்கள், மற்றும் பூமியோடு இணைந்திருக்கும் அல்லது நிரந்தரமாக இணைக்கப்பட்டிருக்கும் எதையும் உள்ளடக்கும். ஆனால் மரம், வளர்ந்து வரும் பயிர்கள்/புல் ஆகியவை உள்ளடங்காது.
சொத்து இடமாறும் போது அதை பெறுபவருக்கு கொடுக்கவேண்டிய அனைத்து வட்டியும் (வேறேதும் குறிப்பிடப்பட்டாலன்றி) அந்தச் சொத்திலேயே அடங்கும்.
1882 ஆம் ஆண்டின் சொத்துரிமை சட்டத்தின் 43 ஆம் பிரிவின் கீழ், ஒரு நபர் மோசடியாகவோ அல்லது தவறுதலாகவோ குறிப்பிட்ட அசையாச் சொத்துகளை மாற்றுவதற்கு அங்கீகாரம் பெற்றிருந்தால், அத்தகைய சொத்துக்களை கருத்தில் கொள்ள சில நடவடிக்கைகளையும் மேற்கொண்டால், அந்த மாற்றங்கள் எதிர்காலத்திலும் தொடர்ந்து செல்லுபடியாகும். கையகப்படுத்தக்கூடிய எந்தவொரு வட்டியின் பொருட்டும் இது மாதிரியான சொத்துகள் பொருந்தும்.
இது பரிமாற்றத்தை பெருபவரின் விருப்பத்தின்போதும், பரிமாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் காலப்பகுதியிலும் செய்யப்படும். இந்த விதிமுறையின் படி, முந்தைய பரிமாற்றதைப் பற்றிய அறிவிப்பினை அறிந்திராத அல்லது விருப்பத்தேர்வு செய்யும் உரிமையில்லாத பரிமாற்றப் பெருனரின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த விதி estoppel இன் விதிமுறையை உள்ளடக்குகிறது, அதாவது பிரதிநிதித்துவம் செய்யும் நபர் பின்னர் அதற்கு எதிராக செயல்பட முடியாது.
ஒப்பந்தம் செய்ய தகுதி வாய்ந்த ஒவ்வொரு நபரும் சொத்துக்களை மாற்றுவதற்கு தகுதியுடையவர்; சொத்து முழுமையாகவோ பகுதிகளாகவோ மாற்றப்படலாம். இடமாற்றம் செய்யப்படும் சொத்துக்கு உரிமையுடையவராகவோ, அல்லது அந்த சொத்துக்களை பரிமாற்றக்கூடிய உரிமையுடையவராகவோ இருக்க வேண்டும். இந்த உரிமையானது முழுமையானதாகவோ அல்லது நிபந்தனைக்கு உள்பட்டதாகவோ இருக்கலாம்; சொத்து அசையும் அல்லது அசையாததாகவோ, தற்போதைய அல்லது எதிர்காலத்திற்கு உரியதாகவோ இருக்கலாம். எழுத்துப்பூர்வமாக மாற்றம் செய்ய வேண்டுமென ஏதேனும் ஒரு சட்டத்தின்கீழ் கட்டாயமாகக் கேட்கப்படாவிட்டால், இத்தகைய மாற்றீடு வாய்வழி செய்யப்படலாம்.
ஒரு நபர் சிந்தைத் தெளிவுள்ளவராயும், ஆனால் சுயமாக எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட இயலாதவராயும் இருந்தால் கூட, அவர் நியமித்த சொத்து வழக்கறிஞர், அதை வழக்கில் ஆஜராகக்கூடிய நபர் (power of attorney) எனும் அதிகாரத்தின் உதவியுடன் செய்ய முடியும்.
சொத்துரிமை இடமாற்றச் சட்டத்தின் பிரிவு 6 இன் படி, எந்தவொரு வகையான சொத்தும் மாற்றப்படலாம். இடமாற்றம் செய்யாதபடி தடுக்கும்/ வலியுறுத்தும் நபர், சில சட்டங்கள் அல்லது உரிய காரணம் காட்டி நிரூபிக்க வேண்டும்; இது பரிமாற்ற உரிமையை கட்டுப்படுத்துகிறது. பரிமாற்றத்தைத் தடுக்க சில சட்ட வரம்பு இல்லாவிட்டால், சொத்து உரிமையாளர் அதை மாற்றலாம். இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், அத்தகைய சொத்துகளின் மேல் அங்கீகாரமில்லாத நபர் ஒருவரால் சொத்து மாற்றம் செய்யப்பட்டு அவர் ஒரு லாபம் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பும் உண்டு.
சொத்து சட்டத்தில் முதன்மையாக அக்கறை கொண்டுள்ள 18 இதர சட்டங்கள் உள்ளன அல்லது கீழே பட்டியலிடப்பட்டுள்ளபடி, சொத்து சட்டத்திற்கு கணிசமான சட்டங்கள் உள்ளன:[1]
{{cite book}}
: |format=
requires |url=
(help)CS1 maint: unrecognized language (link)