சொல்ல துடிக்குது மனசு

சொல்ல துடிக்குது மனசு
இயக்கம்பி. லெனின்
தயாரிப்புஜெ. இரவி
திரைக்கதைபி. லெனின்
சோம சுந்தரேசுவரர்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுபி. கண்ணன்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
கலையகம்மாருதி மூவி ஆர்ட்ஸ்
விநியோகம்மாருதி மூவி ஆர்ட்ஸ்
வெளியீடு19 பெப்பிரவரி 1988 (1988-02-19)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சொல்ல துடிக்குது மனசு 1988-இல் பி. லெனின் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் கார்த்திக், புதுமுகம் பிரியாசிறீ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஜெ. இரவியால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் இளையராஜா இசையில் 1988-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் திகதி வெளியானது.[1][2][3]

கதைச் சுருக்கம்

[தொகு]

தில்லைநாதன், ஒரு நேர்காணலில் பங்குபெறுவதற்காகக் கிராமத்தில் இருந்து வருகிறார். அவருக்கு வங்கியில் வேலை கிடைக்கிறது கூடவே ஜெயக்கொடியுடன் காதல் மலர்கிறது. தேன்மொழியைத் தேடி அவருக்கு பிடித்தமான பாடகர், கவிஞர் மற்றும் அரசியல்வாதி அவருடைய வீட்டிற்கு வருகின்றனர். தில்லைநாதனும் தேன்மொழி யாரென்று தெரியாமல் தேடுகின்றார்.

தில்லைநாதனின் திருமணத்திற்கு முன்பு, அவருடைய துப்பறிவாளர் தேன்மொழியைக் கண்டுபிடித்ததாக கூறுகிறார். இவரும் தேன்மொழியைத் தேடிச் செல்கிறார், ஆனால் அது தேன்மொழி அல்ல. இதற்கிடையில் தில்லைநாதனை யாரோ தாக்கி விடுகின்றனர், திருமணம் நின்று விடுகிறது, வங்கியிலிருந்து வேலை நீக்கம் செய்து விடுகின்றனர். தில்லைநாதனுக்கு அவருடைய வீட்டில் தேன்மொழியும் ஜெயக்கொடியும் ஒருவரே என்ற ஆதாரம் கிடைக்கிறது, ஆனால் தேன்மொழியை அவருடைய வீட்டிலும் அலுவலகத்திலும் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

தன்னுடைய சொந்த கிராமத்திற்குத் திரும்பவும் வருகிறார், அவருடைய தந்தை, "நீ என் மகனே இல்லை", என்று சொல்லி விட நண்பன் பிச்சைமுத்து, மனைவியின் உதவியுடன் புதிய வேலை ஒன்றில் சேர்கிறார்.

ஒரு நாள் ஜெயக்கொடியைப் பிரபலமான பாடகர் வாசுதேவனுடன் சந்திக்கிறார். தான் தேன்மொழியெனவும், வாசுதேவனை திருமணம் செய்து கொண்டதாகவும் கூற தில்லைநாதன் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார். அத்தருணத்தில் அவள் தேன்மொழி தான் என்று வாசுதேவனும் கூறுகிறார். தில்லைநாதனுக்கு ஏ. பி. + வகை இரத்தம் தேவைப்பட ஜெயக்கொடி இரத்தம் தர சம்மதம் தெரிவிக்கிறார். ஆயினும் தன்னுடைய முன்னாள் காதலியிடம் இருந்து இரத்தம் பெற தில்லைநாதனுக்கு விருப்பம் இல்லை. இத்தருணத்தில் தேன்மொழி வருகிறார். இருவருடைய தோற்ற ஒற்றுமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. ஜெயக்கொடி தன்னுடைய முன்னாள் காதலனுக்கு இரத்தம் கொடுக்கிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ள ஒப்புகின்றனர்.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]
சொல்ல துடிக்குது மனசு
பாடல்கள்
வெளியீடு1988
ஒலிப்பதிவு1988
இசைப் பாணிதிரைப்படப் பாடல்கள்
நீளம்29:53
இசைத் தயாரிப்பாளர்இளையராஜா

இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, இளையராஜாவால் உருவாக்கப்பட்டதாகும். 1988-இல் வெளியான இப்பாடல் தொகுப்பில் 6 பாடல்கள் இருந்தது. வாலி, கங்கை அமரன், நா. காமராசன், மு. மேத்தா மற்றும் பொன்னடியான் இத்திரைப்படத்தின் பாடல்களை எழுதியிருந்தனர்[4][5]

எண் பாடல் பாடியவர்(கள்) பாடலாசிரியர் கால அளவு
1 "எனது விழி" ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி கங்கை அமரன் 4:27
2 "குயிலுக்கொரு" மலேசியா வாசுதேவன் பொன்னடியான் 4:36
3 "பூவே செம்பூவே" (ஆண் குரல்) கே. ஜே. யேசுதாஸ் வாலி 5:23
4 "பூவே செம்பூவே" (பெண் குரல்) சுனந்தா 5:37
5 "தேன் மொழி" மனோ நா. காமராசன் 5:15
6 "வாயக்கட்டி வயத்தக்கட்டி" இளையராஜா மு. மேத்தா 4:35

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Find Tamil Movie Solla Thudikkuthu Manasu". jointscene.com. Archived from the original on 2012-03-11. Retrieved 2011-12-09.
  2. "Solla Thudikkuthu Manasu". popcorn.oneindia.in. Retrieved 2011-12-09.
  3. "Filmography of solla thudikkuthu manasu". cinesouth.com. Archived from the original on 2013-10-17. Retrieved 2012-05-18.
  4. "Solla Thudikuthu Manasu – Illayaraja". thiraipaadal.com. Retrieved 2011-12-09.
  5. "Solla Thudikuthu Manasu Songs". raaga.com. Retrieved 2011-12-09.

வெளி இணைப்புகள்

[தொகு]