சோகன் லால் ஜெயின் | |
---|---|
பிறப்பு | 15 திசம்பர் 1929 தேராதூன், இந்தியா |
துறை | தொல்லுயிரியல் (முதுகுநாணி) |
பணியிடங்கள் | இந்தியப் புள்ளியியல் நிறுவனம் |
அறியப்படுவது | இந்திய தொல்லுயிரியல் ஆய்வு |
Author abbrev. (zoology) | ஜெயின் |
சோகன் லால் ஜெயின் (Sohan Lal Jain; பிறப்பு திசம்பர் 15,1929) இந்தியாவின் கொல்கத்தா நகரில் உள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் 33 ஆண்டுகள் பணியாற்றிய தொல்லுயிரியலாளர் ஆவார். தாவரத்தினை உண்ணும் சரோபாட் டைனோசர் பேரினம், ஜெயினோசொரசு இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது. ஆரம்பத்தில் இது அண்டார்டோசாரசு பேரினமாகக் கருதப்பட்டாலும், பின்னர் ஒரு தனித்துவமான பேரினமாக அடையாளம் காணப்பட்டபோது இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.[1] தொல்லுயிரியல் துறையில் இவரது பிற முக்கிய பங்களிப்புகள் சரோபாட் மண்டையோடுகளும் சில புதைபடிவ ஆமைகள் பற்றிய ஆய்வுகளாகும்.