| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
சோடியம் அசுட்டடைடு | |||
பண்புகள் | |||
AtNa | |||
வாய்ப்பாட்டு எடை | 232.99 g·mol−1 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
சோடியம் அசுட்டட்டைடு (Sodium astatide) என்பது NaAt என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் இருபடி கனிம வேதியியல் சேர்மமாகும். சோடியம் மற்றும் அசுட்டட்டைன் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2]
தயாரிப்பு மூலமான பிசுமத் ஆல்பா-கதிர் இலக்கிலிருந்து அசுட்டடைனை வடிகட்டி அதை சோடியம் பைகார்பனேட் கரைசலில் கரைத்து அசுகார்பிக் அமிலத்தின் உதவியால் At+ மற்றும் At3+ அயனிகளைக் குறைத்து சோடியம் அசுட்டடைடு கரைசல் தயாரிக்கப்படுகிறது.[3]
சோடியம் அசுட்டடைடு கதிர்வீச்சு சிகிச்சையில் அயோடின் 131 ஐசோடோப்பிற்குப் பதிலாக பயன்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.[4][3]