![]() | |
இனங்காட்டிகள் | |
---|---|
(நீரேற்று) 60884-94-8 (நீரேற்று) | |
ChemSpider | 8210166 ![]() |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image டிரான்சு-வடிவம் |
பப்கெம் | 24869787 10034601, 24869787 |
| |
பண்புகள் | |
Na2N2O2 | |
வாய்ப்பாட்டு எடை | 105.99 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற படிகங்கள் |
அடர்த்தி | 2.466 கி/செ.மீ3 |
உருகுநிலை | 100 °C (212 °F; 373 K) |
கொதிநிலை | 335 °C (635 °F; 608 K) சிதைவடையும் |
கரையும் | |
கரைதிறன் | எத்தனாலில் கரையாது. |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சோடியம் ஐப்போநைட்ரைட்டு (Sodium hyponitrite) என்பது Na2N2O2 அல்லது (Na+)2[ON=NO]2−.[1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இரண்டு வகையான ஐப்போநைட்ரைட்டு (N
2O2−
2) அயனிகள் காணப்படுகின்றன. அவை சிசு வடிவம் மற்றும் டிரான்சு வடிவம் என்ற பெயரால் அழைக்கப்படும் ஒருபக்க மாற்றியன் மற்றும் மாறுபக்க மாற்றியன் என்பனவாகும். மாறுபக்க மாற்றியன் வடிவம் பொதுவானது என்றாலும் ஒருபக்க மாற்றியனையும் தயாரிக்க முடியும். மாற்பக்க மாற்றியனைவிட ஒருபக்க மாற்றியன் வினைத்திறன் மிக்கதாகும் [1][2].
டிரான்சு சோடியம் ஐப்போநைட்ரைட்டு என்ப்படும் மாறுபக்க சோடியம் ஐப்போநைட்ரைட்டு நிறமற்றது. நீரில் கரையக்கூடியது. ஆனால் எத்தனால் மற்றும் ஈதரில் கரையாது [3][4].
பாரம்பரியமாக சோடியம் நைட்ரைட்டுடன் சோடியம் இரசக்கலவையை சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தி மாறுபக்க-சோடியம் ஐப்போநைட்ரைட்டு தயாரிக்கப்படுகிறது[5][6][7]
மாறுபக்க-சோடியம் ஐப்போநைட்ரைட்டு 1927 ஆம் ஆண்டு ஏ.டபிள்யூ சிகாட்டு என்பவரால் முதன்முதலில் தயாரிக்கப்பட்டது. அவர் இவ்வினையில் ஆல்க்கைல் நைட்ரைட்டுகள், ஐதராக்சிலமோனியம் குளோரைடு மற்றும் சோடியம் ஈத்தாக்சைடு ஆகிய வேதிப்பொருட்களை வினைபுரியச் செய்தார்[4][8]
டி.மெண்டென்கால் என்பவர் 1974 இல் நைட்ரிக் ஆக்சைடுடன் 1,2-டைமெத்தாக்சியீத்தேனில் உள்ள சோடியம் உலோகம், தொலுயீன் மற்றும் பென்சோபீனோன் ஆகிய வினைப்பொருட்களை வினைபுரியச் செய்து இதை தயாரித்தார். விளைபொருளுடன் பின்னர் நீரை சேர்த்து சோடியம் ஐப்போநைட்ரைட்டு பிரித்தெடுக்கப்பட்டது[9]. சோடியம் நைட்ரைட்டை மின்னாற்பகுப்பு செய்து தயாரிக்கும் முறையிலும் இச்சேர்மத்தை தயாரிக்க முடியும்[10].
மாறுபக்க–சோடியம் ஐப்போநைட்ரைட்டின் பல்வேறு வகையான நீரேற்றுகள் Na
2N
2O
2(H
2O)x அறியப்படுகின்றன. இவற்றில் X- இன் மதிப்பு 2, 3.5, 4, 5, 6, 7, 8, மற்றும் 9 என மாறுபடுகிறது;[3][11][12]. ஆனால் இக்கருத்தில் சில சர்ச்சைகளும் உள்ளன.[13]
நீரேற்றம் அடையும் தண்ணீர் அயனிகளுடன் ஒருங்கிணைவதற்குப் பதிலாக அணிக்கோவையில் சற்று பிடிக்கப்பட்டது போல காணப்படுகிறது[13] நீரேற்றுகளை பாசுபரசு பெண்டாக்சைடில் உலர்த்தி பின்னர் வினைகலவையை 120 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் நீரிலி வடிவ சேர்மத்தை தயாரிக்கலாம்.[13].
மாறுபக்க-சோடியம் ஐப்போநைட்ரைட்டு கரைசல் காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைடால் சிதைக்கப்பட்டு சோடியம் கார்பனேட்டு உருவாகிறது.[14].
நீர்ம டைநைட்ரசன் டெட்ராக்சைடு (|N2O4) ]] மாறுபக்க-சோடியம் ஐப்போநைட்ரைட்டை ஆக்சிசனேற்றம் செய்து சோடியம் பெராக்சோ ஐப்போநைட்ரைட்டைக்Na2+
2[ON=NOO]2−) கொடுக்கிறது.[1][15].
சிசு-சோடியம் ஐப்போநைட்ரைட்டு எனப்படும் ஒருபக்க-சோடியம் ஐப்போநைட்ரைட்டு வெண்மையான படிகத் திண்மம் ஆகும். அசிட்டோன் போன்ற புரோட்டான் வழங்கா கரைப்பான்களில் இது கரையாது. மாறுபக்க-சோடியம் ஐப்போநைட்ரைட்டு போல அல்லாமல் நீர் மற்றும் புரோட்டான் வழங்கும் கரைப்பான்களால் சிதைக்கப்படுகிறது[2]
திரவ அமோனியாவிலுள்ள சோடியம் உலோகத்தில் நைட்ரிக் ஆக்சைடை (NO) -50° செல்சியசு வெப்பநிலையில் செலுத்தி ஒருபக்க-சோடியம் ஐப்போநைட்ரைட்டு தயாரிக்கப்படுகிறது[1]
கிளாசு பெல்டுமான் மற்றும் மார்ட்டின் யேன்சன் ஆகியோர் 1996 ஆம் ஆண்டில்
சோடியம் ஆக்சைடையும் 77 கிலோபாசுக்கல் அழுத்தத்திலுள்ள சிரிப்பூட்டும் வாயு எனப்படும் நைட்ரசு ஆக்சைடையும் N
2O
ஓரு மூடிய குழாயிலிட்டு சூடுபடுத்தி இரண்டு மணி நேரம் அளவிற்கு 360 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தி ஒருபக்க-சோடியம் ஐப்போநைட்ரைட்டை தயாரித்தனர். இரண்டு வினையாக்கிகளும் வினைபுரிந்து இவ்வினையில் வெண்மை நிற நுண் படிகங்களைக் கொடுக்கின்றன.[2][8]
நீரிலி வடிவ ஒருபக்க-சோடியம் ஐப்போநைட்ரைட்டு உப்பு 325 பாகை செல்சியசு வெப்பநிலை வரையில் நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. விகிதச்சமனின்றி பிரியும்போது நைட்ரசனையும் சோடியம் ஆர்த்தோநைட்ரைட்டையும் கொடுக்கிறது:[2]
பொதுவாக மாறுபக்க மாற்றியனைவிட ஒருபக்க மாற்றியன் அதிக வினைத்திறன் கொண்ட சேர்மமாக காணப்படுகிறது.[1].