சோனியா பலெய்ரோ | |
---|---|
பிறப்பு | கோவா, இந்தியா |
தொழில் | பத்திரிகையாளர், எழுத்தாளர் |
தேசியம் | இந்தியர் |
சோனியா பலெய்ரோ (பிறப்பு 1977), இந்தியாவின் கோவா மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமாவார். 2006 ம் ஆண்டில் இவரது முதல் நாவலான தி கேர்ள் வைக்கிங் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2010 ம் ஆண்டில் பியூட்டிஃபுல் திங்: இன்சைட் தி சீக்ரெட் வேர்ல்ட் ஆஃப் பாம்பேஸ் டான்ஸ் பார்ஸ் புத்தகமும் 2015 ம் ஆண்டு 13 மென் (2015) புத்தகமும் வெளியானது.2021 ம் ஆண்டு ஜனவரியில் தி குட் கேர்ள்ஸ்: ஆன் ஆர்டினரி கில்லிங் வெளியிடப்பட்டது [1]
பலெய்ரோ கோவாவில் பிறந்தவராயிருந்தாலும், [2] இந்தியத் தலைநகரமான புது தில்லியில் தான் வளர்த்துள்ளார், அங்குள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாறு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்ற இவர், எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். பட்டதாரி பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே, பலெய்ரோ தனது முதல் நாவலளை எழுதத் தொடங்கியுள்ளார். இதுவே 2006 ம் ஆண்டில் பென்குயின் வைக்கிங்கால் வெளியிடப்பட்டது.
"இந்தியாவின் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீது கவனத்தை ஈர்த்து, அவர்களைப் பற்றி உணர்திறன், மனிதநேயம் மற்றும் ஒருமைப்பாட்டுடன் எழுதியதற்காக". பலெய்ரோவிற்கு 2011 ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான கர்மவீர் புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது, [3] 2006 ஆம் ஆண்டின் சிஎன்என் இளம் பத்திரிகையாளர் விருதில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார். [4]