சோன்பப்டி | |
---|---|
இயக்கம் | சிவாணி |
தயாரிப்பு | எஸ். கலைவாணி |
கதை | சிவாணி |
இசை | தன்ராஜ் மாணிக்கம் |
நடிப்பு | ஸ்ரீ சாஹில் பிரியா நிரஞ்சனா |
ஒளிப்பதிவு | தாணு பாலாஜி |
படத்தொகுப்பு | கே. தணிகாச்சலம் |
கலையகம் | கோல்டன் மூவி மேக்கர் |
வெளியீடு | 29 மே 2015 |
ஓட்டம் | 120 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சோன்பப்டி (Soan Papdi) என்பது 2015 ஆம் ஆண்டு வெளியான தமிழ் காமிக் குற்றவியல் பரபரப்புத் திரைப்படம் ஆகும். அறிமுக இயக்குநரான சிவாணி இயக்கிய இப்படத்தில் வழக்கு எண் 18/9 புகழ் ஸ்ரீ, குழந்தை நட்சத்திரம் சாஹில் (அறிமுகம்), பிரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். மனோபாலா, பட்டிமன்றம் ராஜா, பெசன்ட் ரவி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். ஒரு மர்மமான காரணத்தால் இறக்கும் ஒரு பொறியாளரைப் பற்றியும், அவரது இறப்பில் உள்ள மர்ம முடிச்சு எவ்வாறு அவிழ்க்கப்படுகிறது என்பதையும் கதை விவரிக்கிறது. கோல்டன் மூவி மேக்கர் பதாகையின் கீழ் எஸ். கலைவாணி இப்படத்தை தயாரித்தார்.[1]
சோன்பப்டி படப் பாடல்களுக்கு தன்ராஜ் மாணிக்கம் இசையமைத்தார். நா. முத்துக்குமார், அண்ணாமலை, எஸ். கலைவாணி ஆகியோர் பாடல் வரிகளை எழுதினர். இந்த படத்தின் பாடல்களை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டனர். கானா பாலாவின் முதல் டூயட் பாடலைக் கொண்ட திரைப்படம் இதுவாகும்.
டைம்ஸ் ஆப் இந்தியா இந்த படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களில் ஒன்னரை மதிப்பீட்டைக் கொடுத்து.[2]