![]() 2016, இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஆன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிநபர் தகவல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறந்த பெயர் | சோபி மேகன் ஆன்[1] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேசியம் | ![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 23 சனவரி 1997 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாடு | பெரிய பிரித்தானியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | டி38 விரைவோட்டம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கழகம் | சார்ன்வுட் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பயிற்றுவித்தது | ஜோசப் மெக்டோனெல் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சாதனைகளும் விருதுகளும் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மிகவுயர் உலக தரவரிசை | முதலிடம் – 100 மீ ஓட்டம் (டி38) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட சாதனை(கள்) | 100 மீ : 12.44விநாடிகள் 200மீ : 26.18விநாடிகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
சோபி மேகன் ஆன், (Sophie Hahn) (பிறப்பு: 1997 சனவரி 23) இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் ஒரு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரராவார். முக்கியமாக டி 38 விரைவோட்ட நிகழ்வுகளில் போட்டியிடுகிறார். [2] 2013 ஆம் ஆண்டில், இவர் 2013 மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தடகள உலகப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றார். இதில் டி 38 வகைப்பாட்டில் 100 மீட்டரிலும் 200 மீட்டரிலும் கல்ந்து கொண்டு, 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கத்தை வென்று, புதிய உலக சாதனை படைத்தார்.
2018 ஆம் ஆண்டில், பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான டி 38 வகையில் 100 மீட்டரில் தங்கப் பதக்கம் வென்றார். இவ்வாறு, உலகப்போட்டி, இணை ஒலிம்பிக் விளையாட்டு, ஐரோப்பியப் போட்டி, பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு ஆகியவற்றிலிருந்து ஒரே நிகழ்வில் தங்கப் பதக்கங்களை தடகள விளையாட்டு வீரராவார். சக இணை ஒலிம்பிக் வீரர்களான டான் கிரேவ்ஸ், டேலி தாம்சன் லின்ஃபோர்ட் கிறிஸ்டி, சாலி குன்னெல், ஜொனாதன் எட்வர்ட்ஸ், கிரெக் ரதர்ஃபோர்ட் [3] ஆகியோரின் சாதனைகளை மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுகளில் பிரதிபலிக்கிறார்.
பெருமூளை வாதம் கொண்ட இவர், [4] தனது 15 வயதில் தடகள விளையாட்டுக்குள் நுழைந்தார். இலண்டனில் நடந்த 2012 கோடைகால இணை ஒலிம்பிக்கில் உற்சாகமடைந்த இவரது மூத்த சகோதரர், ஒரு ஓட்டப்பந்தய வீரராக இவரது வேகத்தை அறிந்ததால், ஒரு தடகள சங்கத்தைத் தேட ஊக்குவித்தார். இவரது தாயார் அருகிலுள்ள ஒரு சங்கத்துடன் தொடர்பு கொண்டார். இவர், சோதனைகளுக்கு அழைக்கப்பட்டார். பயிற்சியாளர் ஜோசப் மெக்டோனல் இவரை ஏற்றுக்கொண்டார். இவரது முதல் போட்டிப் பந்தயங்கள் 2013 இல் நிகழ்ந்தன. சார்ன்வுட் தடகளத்தில் இவர் 100 மீட்டாரிலும், 200 மீட்டர் ஓட்டத்திலும் கவனம் செலுத்தினார். சூன் மாதத்தில் பல போட்டிகளில் நுழைந்த பின்னர், இங்கிலாந்து தடகள மூத்த மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகளில் முதல் இடத்தைப் பிடித்து, 100 மீ (13.27 விநாடி ) , 200 மீ (27.88 வி) இரண்டையும் வென்றார். [2] [5]
டி 38 வகையில் லியோனில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேசப் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், டி 38 வகைப்பாட்டில் 100 மீட்டர் , 200 மீட்டர் ஓட்டம் ஆகிய இரண்டிலும் நுழைந்தார். சூலை 21 ஆம் தேதி, 200 மீட்டர் தூரத்தை 27.56 விநாடி என்ற நேரத்துடன் வென்றார். [6] இறுதிப் போட்டியில் இவர் பிரேசிலின் வெரோனிகா கிபாலிட்டோவால் தோற்கடிக்கப்பட்டார். ஆனால் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார். [7] சூலை 23 அன்று இவர் 100 மீ விரைவோட்டத்திற்கு தகுதி பெற்றார். இந்த முறை இரண்டாவது இடத்தில் வந்தார். அடுத்த நாள், இறுதிப் போட்டியில், இவர் 13.10 என்ற நேரத்தில் உலக சாதனை நேரத்தை ஓடி, கிப்போலிட்டோவை வீழ்த்தி இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார்.
மே 2014 இல், இவரது உலக சாதனையை உருசியாவின் மார்கரிட்டா கோன்சரோவா முறியடித்தார். இருப்பினும், 24 மணி நேரத்திற்குப் பிறகு, இவர் அதை இலௌபரோவில் மீண்டும் உடைத்து, தனது தனிப்பட்ட சிறப்பை 13.04 ஆகக் குறைத்தார்.