சோபியா வாடியா | |
---|---|
பிறப்பு | 1901 கொலம்பியா |
இறப்பு | 27 April 1986 இந்தியா |
மற்ற பெயர்கள் | நீ சோபியா காமாச்சோ |
பணி | தத்துவவாதி, இலக்கியவாதி |
வாழ்க்கைத் துணை | பி. பி. வாடியா |
விருதுகள் | பத்மஸ்ரீ |
சோபியா வாடியா (நீ சோபியா காமாச்சோ), கொலம்பியாவில் பிறந்த இந்தியரான இறையியல் அறிஞர், இலக்கியவாதி, பென் என்ற அகில இந்திய மையத்தின் நிறுவனர் மற்றும் அதன் இதழான தி இந்தியன் பென் (The Indian PEN) இன் நிறுவனர் ஆசிரியர் ஆவார்.[1][2] அவர் உலகக் கலாச்சாரத்தின் இந்திய நிறுவனம், பெங்களூரு [3] மற்றும் ஆசிய புத்தக அறக்கட்டளை, மும்பை ஆகியவற்றை இணைந்து நிறுவினார்.[4] இந்திய அரசாங்கம் 1960 இல் வாடியாவை கௌரவித்தது. தேசத்திற்கு அவர் செய்த சேவைகளுக்காக நான்காவது மிக உயர்ந்த இந்திய குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருதை அவருக்கு வழங்கியது.[5]
சோபியா கமாச்சோ 1901 இல் கொலம்பியாவில் பிறந்தார். தனது தாய்நாடான கொலம்பியா,பாரிஸ், லண்டன் மற்றும் நியூயார்க்கில் தனது கல்வியை மேற்கொண்டார்.[6] 1927 ஆம் ஆண்டில், அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணத்தில் ஒரு இந்திய இறையியலாளரான பி.பி. வாடியாவைச் சந்தித்தார்.[7] அவரது தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு 1928 இல் அவரை மணந்தார். அடுத்த ஆண்டு, அவர் தன் கணவருடன் இந்தியா சென்று அவருடன் இணைந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இருவரும், ஐக்கிய இறையியல் அறிஞர்கள் கழகத்தை பல கிளைகளாக ஐரோப்பாவின் பல்வேறு இடங்களில் நிறுவினர்.[8] மேலும் 1929 இல் மும்பையில் முதல் இந்திய கிளையை நிறுவினர்.[9]
இந்த ஜோடி, 1930 ஆம் ஆண்டு, பென்னின் அகில இந்திய மையத்தை மும்பையில் நிறுவியது.[10] மேலும் தி இந்தியா பென் மற்றும் தி ஆர்யன் பாத் ஆகிய இரண்டு இதழ்களைத் துவக்கியது.[11] தி இந்தியா பென் இதழின் ஆசிரியராக இருந்த சோபியா, அவர் இறக்கும் வரை அந்தப் பதவியில் இருந்தார்.[12] 1945 ஆம் ஆண்டில், தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் பெங்களூருவிற்கு அருகிலுள்ள பசவனகுடியில் 1945 ஆம் ஆண்டில் இந்திய உலக கலாச்சார நிறுவனத்தை நிறுவினார்.[13] இந்த காலகட்டத்தில், அவர் 1936 இல் மதங்களின் சகோதரத்துவம் மற்றும் 1941 இல் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் முன்னுரையுடன் குடியுரிமைக்கான தயாரிப்பு ஆகிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டார்.[14] மதங்களின் சகோதரத்துவத்தின் இரண்டாவது பதிப்பு 1944 இல் மகாத்மா காந்தி எழுதிய முன்னுரையுடன் வெளிவந்தது.[15] மும்பையில் ஆசிய புத்தக அறக்கட்டளையை நிறுவுவதில் அவர் முக்கியப் பங்காற்றினா.ர் [15] அது பின்னர் அவரது கணவரின் புகழ்பெற்ற படைப்பான காந்திய வழி என்னும் நூலை வெளியிட்டது.[16]
சோபியா வாடியா 1958 இல் தனது கணவரின் மரணத்திற்குப் பிறகும் தனது சமூக வாழ்க்கையைத் தொடர்ந்தார்.[17] மேலும் பதினொரு அகில இந்திய எழுத்தாளர்கள் மாநாடுகளை ஒருங்கிணைத்து நடத்தினார்.[14] இந்திய அரசாங்கம் 1960 இல் பத்மஸ்ரீ விருதை அவருக்கு வழங்கியது [18] சோபியா, 27 ஏப்ரல் 1986 அன்று உயிர் துறந்தார்.[15]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)