சோமங்கலம் | |
---|---|
சோமங்கலம், காஞ்சிபுரம், தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 12°57′09″N 80°02′27″E / 12.9524°N 80.0409°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
ஏற்றம் | 42.95 m (140.91 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 4,376 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 602109 |
புறநகர்ப் பகுதிகள் | தண்டலம், குன்றத்தூர், நடுவீரப்பட்டு, பூந்தண்டலம், சிறுகளத்தூர், நந்தம்பாக்கம் |
மக்களவைத் தொகுதி | திருப்பெரும்புதூர் |
சட்டமன்றத் தொகுதி | திருப்பெரும்புதூர் |
சோமங்கலம் (Somangalam) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 42.95 மீட்டர்கள் (140.9 அடி) உயரத்தில், (12°57′09″N 80°02′27″E / 12.9524°N 80.0409°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு சோமங்கலம் புறநகர்ப் பகுதி அமைந்துள்ளது.
2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், சோமங்கலம் புறநகர்ப் பகுதியின் மொத்த மக்கள்தொகை 4,376. இதில் ஆண்கள் எண்ணிக்கை 2,199 மற்றும் பெண்களின் எண்ணிக்கை 2,177 ஆகும்.[1]
சோமங்கலம் பகுதியில் சுந்தரராஜ பெருமாள் கோயில் என்ற பெருமாள் கோயில் ஒன்றும்,[2] சோமநாதீசுவரர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்றும் உள்ளன.[3]
சோமங்கலம் பகுதியானது, திருப்பெரும்புதூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.