சோரிகுலசு | |
---|---|
![]() | |
இமயமலை மூஞ்சூறு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | யூலிபோடிப்லா
|
குடும்பம்: | |
பேரினம்: | சோரிகுலசு எட்வர்ட் பிளைத், 1854
|
சிற்றினங்கள்
|
சோரிகுலசு (Soriculus) என்பது ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட மூஞ்சூறு பேரினமாகும். பல புதை படிவ சிற்றினங்களுடன், இப்பேரினத்தின் ஒரே வாழக்கூடிய சிற்றினமாக இமயமலை மூஞ்சூறு உள்ளது. இப்பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்ட பிற சிற்றினங்கள் வேறு பேரினங்களின் கீழ் மாற்றப்பட்டுள்ளன.
சோரிகுலசு பேரினமானது நெக்டோகாலினி இனக்குழுவின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. முன்பு, இந்த பேரினத்தில் பல சிற்றினங்கள் இருந்தன. ஆனால் இவை இப்போது சோட்சிகோவா மற்றும் எபிசோரிகுலசு போன்ற பிற பேரினங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. அழிந்துபோன அசோரிகுலசு என்ற ஐரோப்பியப் பேரினத்தைச் சேர்ந்த சிற்றினங்களும் ஒரு கட்டத்தில் இங்குச் சேர்க்கப்பட்டன. தற்போது இந்த பேரினமானது சோரிகுலசு காசுமீரியென்சிசு மற்றும் சோரிகுலசு குபினி ஆகிய அழிந்துபோன சிற்றினங்களைக் கொண்டுள்ளது.[1] சோ. காசுமீரியென்சிசு இப்போது சோட்சிகோவா பேரினத்தில் வைக்கப்பட்டுள்ள சிற்றினங்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.[2] டி. என். ஏ. ஆராய்ச்சி, ஐரோப்பாவில் சமீபத்தில் அழிந்துபோன அசோரிகுலசு/நெசிடோடைட்சு மூஞ்சுறுகளுடன் சோரிகுலசின் நெருங்கிய உறவை உறுதிப்படுத்தியுள்ளது.[3]