சோவா மொரானி | |
---|---|
2018 இல் சோவா மொரானி | |
பிறப்பு | 29 மார்ச்சு 1988 இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகை, வடிவழகி |
செயற்பாட்டுக் காலம் | 2011–தற்போது |
உறவினர்கள் | அலி மொரானி (மாமா) லக்கி மொரானி (அத்தை) பத்மினி கோலாபுரே (மைத்துனர்) |
சோவா மொரானி (Zoa Morani பிறப்பு 29 மார்ச் 1988) என்பவர் ஓர் இந்திய வடிவழகி மற்றும் பாலிவுட் படங்களில் நடிக்கும் ஒரு நடிகை ஆவார்.[1][2][3] ஆல்வேஸ் கபி கபி (2011), பாக் ஜானி (2015), தைஷ் (2020) மற்றும் டியூஸ்டே & பிரைடே (2021) ஆகிய திரைப் படங்கள் மற்றும் வலைத் தொடர்களில் இவர் நடித்துள்ளார்.
மொரானி, திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் சினியுக் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் இணை உரிமையாளரான கரீம் மொரானியின் மகள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களான அலி மொரானி மற்றும் முகமது மொரானி ஆகியோரின் மருமகள் ஆவார். இவரது அத்தை லக்கி மொரானி (முகமதுவின் மனைவி) ஆடை வடிவமைப்பாளர் மற்றும் நடிகை ஆவார்.
மொரானி 2007 ஆம் ஆண்டு ஓம் சாந்தி ஓம் திரைப்படத்திற்கு உதவி இயக்குநராகத் தன் தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் ஹல்லா போல் (2008) படத்திற்கு உதவி இயக்குநராக பணியாற்றினார்.[4] மொரானிக்கு திரைப்படங்களை இயக்குவதில் விருப்பமில்லை, ஆனால் நடிப்புக்கு தயாராவதற்காக இவர் இந்தப் பணிகளை ஏற்றார்.[5] 2011 ஆம் ஆண்டு ஷாருக் கானின் தயாரிப்பில் ஆல்வேஸ் கபி கபி என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். மேலும் திரைப்பட இயக்குனர் சியாம் பெனகல் தனது அடுத்த படத்திற்காக ஒப்பந்தம் செய்தார்.[1] 2011 இல், இவர் லேக்மி பேஷன் வீக்கின் போது வடிவழகியாக பணி பெற்றார்.[4] பின்னர் இவர் லேக்மிபேஷன் வீக்கின் 2012 பதிப்பிலும் தோன்றினார்.[6]
குணால் கேமு மற்றும் மந்தனா கரிமிக்கு ஜோடியாக பாக் ஜானி படத்தில் மொரானி திரைப்பட தயாரிப்பாளர் விக்ரம் படால் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[7][8][9] இத்திரைப்படம் பூஷன் குமார், விக்ரம் பட் ஆகியோர் இணைந்து தயாரித்தனர். படம் 2015 இல் வெளியானது.
மொரானி குடும்பத்தில் இருந்து வந்த இவர் திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானியின் மகள் ஆவார். இவர் தன் சகோதரர்களான அலி மொரானி மற்றும் முகமது மொரானி ( லக்கி மொரானியின் கணவர்) ஆகியோருடன் சினியுக் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருக்கிறார். இவரது சகோதரியும் சினியுக் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்துள்ளார். அவர் நடிகை பத்மினி கோலாபுரேவின் மகன் பிரியங்க் ஷர்மாவை மணந்தார்.[10] இவர் ஒரு நிஜாரி முஸ்லிம் ஆவார்.[11] இந்தியாவில் கோவிட்-19 பரவலின் உச்சக்கட்டத்தில் நோயினால் இவர் பாதிக்கப்பட்டார். ஆனால் அதில் இருந்து பின்னர் குணமடைந்து மீண்டு வந்தார்.[12]
2022 | தஹாத் | பாத்திரம் | திரைப்படம்/வலை தொடர் | நிறுவனம் | |
---|---|---|---|---|---|
2011 | ஆல்வேஸ் கபி கபி | நந்தினி ஓபராய் | திரைப்படம் | ||
2012 | மஸ்தான் | திரைப்படம் | |||
2015 | பாக் ஜானி | தான்யா | திரைப்படம் | ||
2018 | அகூரி | ஜெஹான் இரானி | வலைத் தொடர் | ஜி5 | [13][14] |
2019 | பூத் பூர்வா | ஏஞ்சலினா | வலைத் தொடர் | ஜீ5 | |
2020 | தைஷ் | மஹி | திரைப்படம் | ஜீ5 | |
2021 | டியூஸ்டே அண்ட் பிரைடே | காஜல் | திரைப்படம் | நெற்ஃபிளிக்சு | |
2023 | தஹாத் | வந்தனா | இணையத் தொடர் | அமேசான் பிரைம் | |
2023 | ஆதுரா | மாளவிகா | இணையத் தொடர் | அமேசான் பிரைம் |
ஆண்டு | திரைப்படம் |
---|---|
2007 | ஓம் சாந்தி ஓம் |
2008 | ஹல்லா போல் |