சௌந்தரராஜ ஐயங்கார் பார்த்தசாரதி (Soundararaja Iyengar Parthasarathy) 1959 முதல் 1965 வரை தி இந்துவின் தலைமை தொகுப்பாசிரியராக பணியாற்றிய ஒரு இந்தியப் பத்திரிகையாளர் ஆவார். [1]
பார்த்தசாரதி, பிரித்தானிய இந்தியாவின் சென்னையில் அரசு ஊழியர் எஸ். சௌந்தரராஜ ஐயங்காருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர், இந்திய அரசு ஊழியரும், நிர்வாகியுமான சௌ. சீனிவாச ராகவையங்காரின் தம்பியும், எஸ். கஸ்தூரி ரங்க ஐயங்காரின் மூத்த சகோதரரும் ஆவார். பார்த்தசாரதி சென்னையில் தனது கல்வியைப் பெற்றார். பின்னர், செப்டம்பர் 1924 இல் தி இந்துவில் துணை ஆசிரியராக சேர்ந்தார்.
இவர், படிப்படியாக இந்துப் பத்திரிக்கையின் உதவி ஆசிரியரானார். 1959இல் அதன் தலைமை ஆசிரியர் கஸ்தூரி சீனிவாசனின் மரணத்தின் பின்னர், கோ. நரசிம்மனுடன் நிர்வாக-இயக்குநராக இருந்தபோது இவர் அதன் தலைமை ஆசிரியரானார். இவர், 1965 இல் தான் இறக்கும் வரை தலைமை ஆசிரியராக பணியாற்றினார். மிதமான பார்வைகளுக்கு பெயர் பெற்றவர். இவர் ஆசிரியராக இருந்த காலத்தில், செய்தித்தாள் ஒரு பாதுகாப்பான பாதையைப் பின்பற்றி சர்ச்சையைத் தவிர்த்தது.
பார்த்தசாரதி, 1965 இல் இறந்தார். இவருக்குப் பிறகு கோபாலன் கஸ்தூரி இந்துவின் தலைமை ஆசிரியராக இருந்தார்.