சௌகாய்ஜம் தனில் சிங் | |
---|---|
பிறப்பு | மணிப்பூர், இந்தியா |
மற்ற பெயர்கள் | பாரம்பரிய நடனக் கலைஞர் |
அறியப்படுவது | மணிப்புரி, நாட சங்கீர்த்தனா |
பெற்றோர் | எஸ். சேர் சிங் |
விருதுகள் | பத்மசிறீ மணிபூர் மாநில கலா அகாதமி விருது சங்கீத நாடக அகாதமி விருது வைத்ய ரத்னா விருது, |
சௌகாய்ஜம் தனில் சிங் (பிறப்பு:1 பிப்ரவாி 1946) இந்தியாவைச் சேர்ந்த பாரம்பரிய நடனக்கலைஞர் ஆவார். இவா் பாரம்பரிய நடின வடிவங்களான மணிப்புாி மற்றும் நாட்டா சங்கீா்த்தனா நடனத்தில் புகழ் பெற்று விளங்குகிறார்.[1]
வட கிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரில் பிறந்த சௌகாய்ஜம் தனில் சிங்கின் தந்தை சௌகாய்ஜம் சோ் சிங் ஒரு மணிப்பூரி நடனக் கலைஞர் ஆவார். தாயார் சௌகாய்ஜம் ஓங்பி இபெமல் தேவி. தனது தந்தையிடமிருந்தும், குரு டோம்பி சர்மா, குரு பைக்சந்திர சிங் மற்றும் குரு கொயெரெங் சிங் ஆகியோரிடமிருந்தும் தனது ஆரம்ப பயிற்சியைப் பெற்றார். [2] பின்னர், மணிப்பூா் மாநிலத் தலைநகர் இம்பாலின் ஜவகர்லால் நேரு மணிப்பூர் நடனக் கலை மன்றத்தில் புகழ்பெற்ற நடனக் கலைஞரும், பத்மசிறீ விருது பெற்றவருமான மைஸ்னம் அமுபி சிங் என்பவாிடம் மணிப்புரி நடனம் மற்றும் நாட்ட சங்கீர்த்தனா ஆகியவற்றில் பட்டயப் படிப்பு மற்றும் முதுகலைப் பட்டயப் படிப்பும பயின்றுள்ளார்.[1]
தான் பயின்ற ஜவகர்லால் நேரு மணிப்பூர் நடனக் கலை மன்றத்தில் 1976 ஆம் ஆண்டு குருவாகவும் (பங்) 1988 ஆம் ஆண்டில் பதவி உயா்வு பெற்று பிரதம குருவாகவும் பணி அமா்த்தப்பட்டார். 2005 ஆம் ஆண்டு இயக்குநா் பொறுப்பைக் கவனித்த அவா் 2006 ஆம் ஆண்டு சனவாி மாதத்துடன் பணி ஓய்வு பெற்றார்.
இவா் பாரம்பரிய நடனக்கலை தொடா்பான பல புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
போன்ற பல விருதுகளை இவா் பெற்றுள்ள இவா் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல மேடைகளில் மணிப்புரி நடனம் மற்றும் நாட்டா சங்கீர்தனா நடனங்களை ஆடியுள்ளார். மேலும் இந்திய அரசின் கலாச்சார அமைச்சின் சக உறுப்பினராக உள்ளார்[5]