சௌந்தர்யன் | |
---|---|
பிறப்பு | சென்னை, தமிழ்நாடு |
இசை வடிவங்கள் | திரை இசை |
தொழில்(கள்) | இசையமைப்பாளர் |
இசைத்துறையில் | 1990 – தற்போது வரை |
சௌந்தர்யன் (Soundaryan) என்பவர் ஒரு திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் சேரன் பாண்டியன் (1991) திரைப்படத்தில் அறிமுகமானார். சிந்துநதிப் பூ (1994) திரைப்படம் இவருக்குத் திருப்புமுனையை ஏற்படுத்தியது.[1]
சௌந்தர்யன் தனது திரைப் பயணத்தை கே. எஸ். ரவிக்குமாரின் இரண்டு படங்களான சேரன் பாண்டியன் (1991) மற்றும் புத்தம் புது பயணம் (1991) ஆகியவற்றுடன் தொடங்கினார். பின்னர் 1990களில் கிராமத்துப் பின்னணியைக் கொண்ட படங்களுக்கு இசையமைத்தார். ‘’கோபுர தீபம்’’ (1997) மற்றும் ‘’சேரன் சோழன் பாண்டியன்’’ (1998) ஆகிய படங்களில் இவரது பணியானது பாராட்டப்பட்டது.
2000கள் மற்றும் 2010கள் முழுவதும் திரைப்பட இசையமைப்பாளராக தனது பணியைத் தொடர்ந்தார். ‘’நதிகள் நனைவதில்லை’’ (2014) மற்றும் ‘’நனையாத மழையே’’ (2016) ஆகிய படங்களில் பணியாற்றினார்.[2][3][4]