சௌமியா கொலை வழக்கு (Soumya murder case) என்பது வன்கலவி கொலை வழக்கு தொடர்பான ஒரு குற்றவியல் வழக்கு ஆகும். ஷொர்ணூர் அருகே உள்ளா மன்கஜ்காட் எனும் ஊரில் வசித்த 23 வயதான சௌமியா எனும் பெண் ,எர்ணாகுளத்தில் இருந்து ஷொர்ணூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் புகைவண்டியில் 1 பிப்ரவரி 2011 அன்று சென்று கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்தது.
இந்த சம்பவம் புகை வண்டி எண் 56608, எர்ணாகுளம் சந்திப்பு - ஷொறணூர் சந்திப்பு பயணிகள் ரயில் வள்ளத்தோல் நகர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பின்னர் நடந்தது. வழக்கின் படி, [1] [2] இறந்தவர் சௌமியா எனும் பெண்,அவருக்கு 23 வயது. ஒரு ஏழைக் குடும்பத்ய்தினைச் சேர்ந்தவர் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிய ஒரு சிறிய வேலை கிடைத்தது. அவரும் அவருடைய இளைய சகோதரனும் அவருடைய தாயும் இருந்த குடும்பம் அவர் சம்பாதிக்கும் மாதாந்திர சம்பளத்திலிருந்து தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டிக்கொண்டிருந்தது. எப்போதாவது, விடுமுறை நாட்களில், அவர் எர்ணாகுளம் - ஷோர்ணூர் பயணிகள் புகை வண்டியில் ஷோர்னூரில் உள்ள தனது வீட்டிற்கு மாலை நேரத்தில் எர்ணாகுளத்தில் இருந்து செல்வது வழக்கம். அவள் வேலை செய்யும் போது, எர்ணாகுளத்தில் பணிபுரியும் ஒரு இளைஞனுடன் அவர் பழகினாள் அவர்கள் ஒருவரை ஒருவர் விரும்பினர், அவர் அவளிடம் தனது விருப்பத்தினை முன்மொழிந்தார். இரு குடும்பங்களும் திருமணத்திற்கு உடன்பட்டன. அதன் படி அந்தப் பெண்ணின் வீட்டில் 1 பிப்ரவரி 2011 அன்று தங்கள் திருமண ஒப்பந்த விழாவை நடத்த முடிவு செய்தனர்.அதற்காக பிப்ரவரி 1, 2011 அன்று மாலை 5.30 மணிக்கு, எர்ணாகுளம் நகர வடக்கு புகைவண்டி நிலையத்தில் இருந்து ஷொர்ணூர் வரையிலான எர்ணாகுளம்-ஷொர்ணூர் பயணிகள் புகைவண்டியின் கடைசி பெட்டி, பெண்கள் பிரிவில் ஏறினார். புகை வண்டி திருச்சூரை அடைந்ததும், அந்த பெண்கள் பிரிவில் இருந்த பெரும்பாலான பயணிகள் கீழே இறங்கினர். ரயில் வடக்கஞ்சேரியை அடைந்தபோது அந்த பெண் பிரிவில் இருந்த மற்றொரு பெண் கீழே இறங்கினார். அங்கு, அவர் நடைமேடையில் இறங்கி, மீண்டும் பெட்டிக்கு வந்தார். அப்போது ஒரு ஆண் நிற்பதை இவர் கண்டார். புகைவண்டி முள்ளூர்கரை அடைந்ததும், மீதமுள்ள பயணிகளும் அங்கே இறங்கினர். அந்த பெட்டியின் பெண்கள் பிரிவில் வேறு யாரும் இல்லாததால், அந்த ஆண் பெண்கள் பெட்டிக்குள் ஏறினார் . இந்த ரயில் வல்லத்தோல் நகர் ரயில் நிலையத்தை அடைந்தது, அங்கு அது சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. [1]
குற்றம்சாட்டப்பட்ட, கோவிந்தசுவாமி, பல குற்றச் செயல்களில் ஈடுபட்டவர், இறந்தவர் பெட்டியில் தனியாக இருப்பதை கவனித்துள்ளார். ரயில் வள்ளத்தோல் நகர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, ஷோர்ணூர் நோக்கிச் சென்றபோது, குற்றம்சாட்டப்பட்டவர் அந்த பெண் பெட்டியில் வேகமாக ஏறி, அந்தப் பெண்ணை நோக்கி முன்னேறினார்.அந்தப் பெண் அவரிடம் இருந்து தப்பிக்க அந்தப் பெட்டியில் அங்கும், இங்குமாக ஓடியுள்ளார். அவரால் இயன்றவரையில் கடுமையாக போராடியுள்ளார்.அவளது தலை பலமுறை வலுக்கட்டாயமாக பெட்டியின் சுவர்களில் அடிக்கப்பட்டது. காயம் ஏற்பட்டதில் அவர் மயக்கமடைந்தார். ஓடும் புகைவண்டியில் இருந்து வீசப்பட்டதில் அவரது முகம் புகைவண்டி நிலையத்தில் மோதியது.[1]