சௌமியா ராசேந்திரன் | |
---|---|
பிறப்பு | 1985/1986 (அகவை 38–39)[1] |
மொழி | ஆங்கிலம் |
கல்வி | சசெக்ஸ் பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியம் |
வகை | இளம் வயதினருக்கான புனைகதை, வரைகதை புத்தகங்கள், குழந்தைகளுக்கான உத்வேகம் தரும் புத்தகங்க |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | மயில் வில் னாட் பி குயிட் |
சௌமியா ராசேந்திரன் ( Sowmya Rajendran ) ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார். சாகித்திய அகாதமி 2015 பால் சாகித்ய புரஸ்கார் போன்ற விருதுகளைப் பெற்ற இவர், 20க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.[2] இளம் வயதினருக்கான புனைகதை, வரைகதை புத்தகங்கள் மற்றும் குழந்தைகளுக்கான உத்வேகம் தரும் புத்தகங்களை எழுதியுள்ளார்.
சௌமியாவின் எழுத்துகள், மற்ற மாறுபட்ட பிரச்சினைகளுடன், அழகைப் பற்றிய ஒரே மாதிரியான கருத்துக்களாக உள்ளன. இவரது தி பிளசன்ட் ராக்சசா என்ற புத்தகம் இனிமையானவனும் மற்றும் அழகானவனுமான கரிமுகன் என்ற அரக்கனின் கதையை விவரிக்கிறது. பாய் ஹூ ஆஸ்க்டு வொய் என்ற புத்தகம் அம்பேத்கரின் இளமைப்பருவத்தையும், விங்ஸ் டு ஃப்ளை என்ற புத்தகம் இணை ஒலிம்பிக் விளையாட்டு வீராங்கனையான மாலதி ஹோலாவைப் பற்றி சித்தரிக்கின்றன.[2] 2015 அனைத்துலக பெண்கள் நாளன்று வெளியிடப்பட்ட தி பாடம், ஒரு வலைப்பதிவாகத் தொடங்கியது. மேலும், பாலின அடிப்படையிலான வன்முறை, பாலின சமத்துவமின்மை மற்றும் திருமண அமைப்பு பற்றி கிண்டலாக விவாதிக்கிறது[3] தி வெயிட் லிப்டிங் பிரின்சஸ் (2019) பளுதூக்குதலில் ஆர்வமுள்ள ஒரு இளவரசியை சித்தரிக்கிறது.[4] சடன்லி கௌ திடீரென்று தோன்றும் ஒரு பசுவைப் பற்றிய வேடிக்கையான கதை
மயில் வில் நாட் பி குயட் என்ற கதையில் 12 வயது சிறுவன் மயில் கணேசன் ஒரே மாதிரியான பாலின சிக்கல்களை ஆராய்ந்து நாட்குறிப்பு வடிவத்தில் நிவேதிதா சுப்பிரமணியம் என்பவருடன் இணைந்து எழுதியிருந்தார். புத்தகம் 2011 இல் வெளியிடப்பட்டு 2015 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி வழங்கிய பால சாகித்ய புரஸ்கார் விருதை வென்றது.[2] இந்த புத்தகம் மோஸ்ட்லி மேட்லி மயில் (2013) மற்றும் திஸ் இஸ் மீ, மயில் (2019) எனஇரண்டு தொடர்ச்சிகளாக வெளியாகின. தொடரின் கதாநாயகனான மயில் சென்னையில் வசித்து வருகிறார். அவர் பாலின பாகுபாடு, குடும்ப வன்முறை, அடையாள அரசியல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் சாதி மோதல் உள்ளிட்ட தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கிறார்.[5]
கேர்ள்ஸ் டு தி ரெஸ்க்யூ என்பது வழக்கமான விசித்திரக் கதைகளின் மாற்று வடிவமாகும். தி அண்டர்வாட்டர் பிரண்ட்ஸ் என்ற புத்தகம் பின்னர் தொடர்ச்சியான படப் புத்தகங்களாக வெளியிடப்பட்டது. இவர் பாலின ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றுக்கொண்டிருந்தபோது இது எழுதப்பட்டது.[1]
சௌமியா ராசேந்திரன் புனே மாவட்டம், பசான் என்ற இடத்தைச் சேர்ந்தவர். இவர், ஐக்கிய இராச்சியத்தின் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் பாலின ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு 2011 இல் பிறந்த அதிரா என்ற மகள் உள்ளார். [1] சிறுவயதில் எனிட் பிளைட்டன், ஆல்பிரட் ஹிட்ச்காக், பிரேம்சந்த், ஆர். கே. நாராயணன் மற்ரும் அகதா கிறிஸ்டி போன்றவர்களின் கதைகளையும் மற்றும் டிங்கிள், அம்புலிமாமா, கோகுலம், சம்பக் போன்ற குழந்தைகள் இதழ்களையும் விரும்பிப் படித்துள்ளார்.[5]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)