ஜகதீஷ் | |
---|---|
2012இல் ஜகதீஷ் | |
பிறப்பு | பி. வி. ஜகதீஷ் குமார் 12 சூன் 1955 திருவனந்தபுரம், திருவாங்கூர் கொச்சி (தற்போதைய கேரளம்), இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | மார் இர்வின் கல்லூரி (முதுகலை வணிகம்) |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1984–தற்போது வரை |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழ்க்கைத் துணை | பி. ரமா (இற. 2022) |
பிள்ளைகள் | 2 |
பி. வி. ஜகதீஷ் குமார் (P. V. Jagadish Kumar) (பிறப்பு ஜூன் 12,1955), ஜகதீஷ் என்ற பெயரில் நன்கு அறியப்பட்ட இவர் ஓர் இந்திய நடிகரும், திரைக்கதை ஆசிரியரும் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளரும் ஆவார்.[1] 400க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களிலும், இரண்டு இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். |நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களுக்காக இவர் மிகவும் பிரபலமானவர். 1990களில் 50க்கும் மேற்பட்ட படங்களில் முன்னணி நடிகராக ஜகதீஷ் நடித்தார். 1990களில் மலையாளத் திரைப்படத்துறைவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருந்தார்.
ஜகதீஷ் வணிகத்தில் முதுகலை பட்டதாரியாவார்.[2] ஒரு வங்கி அதிகாரி பணியில் தொடங்கி அரசு உதவி பெறும் கல்லூரி விரிவுரையாளராகவும், நடிகராகவும் மாறினார்.
ஜகதீஷ் மைடியர் குட்டிச்சாத்தான் (1984) என்ற இந்தியாவின் முதல் 3டி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். சித்திக்-லால் இயக்கிய இன் ஹரிஹர் நகர் (1990) படத்தில் அப்புக்குட்டனாக நடித்ததன் மூலம் இவருக்கு ஒரு வெற்றி கிடைத்தது. காட்பாதர் (1991), மிமிக்ஸ் பரேட் (1991) ,வெல்கம் டு கொடைக்கானல் (1992), திருட்டல்வாடி (1992), பிரியபெட்டா குக்கு (1992), பாண்டு பாண்டோரு ராஜகுமாரி (1992), குனுக்கிட்டா கோழி (1992), காசர்கோடு காதர்பாய் (1992), கள்ளன் கப்பலில் தானே (1992), கிரிஹபிரவேசம் (1992), ஸ்திரீதானம் (1993), சாத்தே பிரதானா பய்யன்ஸ் (1993), இஞ்சக்கடன் மத்தாய் & சன்ஸ் (1993), சிம்ஹவலன் மேனன் (1995), ;;மிமிக்ஸி சூப்பர் (1996), ஹிட்லர் (1996), ஜூனியர் மந்தாபன் (1997) போன்ற படங்களில் இவருக்கு குறிப்பிடத்தக்க பாத்திரங்கள் அமைந்தன. அதிபன் (1989) உட்பட ஒரு சில படங்களுக்கு திரைக்கதைகளையும் எழுதியுள்ளார் .[3]
2016 ஆம் ஆண்டில், இந்திய தேசிய காங்கிரசு சார்பில் கீழ் பத்தனாபுரம் சட்டமன்றத் தொகுதியில் தனது சக நடிகரும் முன்னாள் மாநில அமைச்சருமான கீ. பா. கணேஷ் குமாரை எதிர்த்துப் போட்டியிடுவதற்காக ஜெகதீஷ் அரசியலில் நுழைந்தார். ஆனால் அத்தேர்தலில் தோல்வியடைந்தார்.[4]
ஜெகதீஷ் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் தடயவியல் பேராசிரியரான பி. ரேமாவை மணந்தார். இவரது மனைவி ஏப்ரல் 1, 2022 அன்று இறந்தார்.[5] தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் மருத்துவர்கள்.[6][7]
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)