ஜடேஜா

ஜடேஜா
ஜடேஜாக்களின் தலைவரான பர்வாஜி ஜடேஜாவின் ஓவியம், 1838, திருமதி போஸ்டன்ஸ் அவர்களால் வரையப்பட்டது.
நாடுஇந்தியா மற்றும் பாக்கித்தான்
தற்போதைய பகுதிகச்சு மாவட்டம்
சிந்து மாகாணம்
சௌராஷ்டிரா
நிறுவப்பட்டது1540
நிறுவனர்ஜடாஜி
Estate(s)கட்ச் இராச்சியம்
நவநகர் இராச்சியம்
மோர்வி இராச்சியம்
துரோல் சமஸ்தானம்
கொண்டல் இராச்சியம்
இராஜ்கோட் இராச்சியம்

ஜடேஜா (Jadeja)[1] அல்லது ஜரேஜா [2]) என்பது இந்திய மாநிலமான குசராத்து மற்றும் பாக்கித்தானின் சிந்துவின் தர்பார்க்கர் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு இராஜபுத்திர குலமாகும்.[3] இவர்கள் சிந்துவின் சம்மர்கள் என்ற ஆயர் குழுவிலிருந்து தோன்றினர்.[4] மேலும் சோதா ராஜபுத்திர பெண்களுடனான திருமணத்திற்குப் பிறகு[5] இராஜபுத்திரமயமாக்கல் என்ற செயல்முறையை பின்பற்றி இராஜபுத்திர அடையாளத்தின் மீது உரிமை கோரினர்.[6]

வரலாறு

[தொகு]

9-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்ச் மற்றும் சௌராட்டிராவின் சில பகுதிகளில் லாகோ குராரோ மற்றும் லாகோ புலானி ஆகியோரால் இராச்சியங்கள் நிறுவப்பட்டபோது ஜடேஜாக்களின் தோற்றம் ஏற்பட்டதாக வாய்வழி ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் குலத்தின் மூதாதையரான ஜாம் ஜாதாவின் சந்ததியினராக இருந்தனர்.[7][8] இருப்பினும், கிடைக்கக்கூடிய எழுதப்பட்ட ஆதாரங்கள் 14 ஆம் நூற்றாண்டில் ஜடேஜாக்களின் தோற்றத்தை முன்வைக்கின்றன.[9] அரேபியர்கள் சிந்துவை கைப்பற்றிய பிறகு, சிந்துவிலிருந்து பல்வேறு புலம்பெயர்ந்த சமூகங்களும் (பாக்கித்தான்) அரபு வணிகர்களும் கட்ச் பகுதியில் குடியேறினர்.[10] சிந்து மாநிலத்தின் இந்து கிளைகள் ஜடேஜர்கள் என்று வரலாற்றாசிரியர் அனிசா சக்சேனா கூறுகிறார். அதன் தலைவர்கள், மற்ற சம்மர்களைப் போலவே, ஜாம் என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டு கட்ச் பகுதியில் குடியேறினர்.[10] இந்த கருத்தை வரலாற்றாசிரியர் ரஷ் புரூக்கும் முன்வைத்துள்ளார். அவர் இவர்களை சம்மர் இந்துக்கள் என்றும் இசுலாமியத்திற்கு மாறுவதை எதிர்க்க குடிபெயர்ந்திருக்கலாம் என்றும் கூறுகிறார்.[11] ஜடேஜாக்கள் அரசியல் அதிகாரத்தைப் பெற்றவுடன், இராஜஸ்தானின் இராஜபுத்திரர்களுக்குப் பிறகு தங்களை மாதிரியாகக் கொள்ளத் தொடங்கினர். மேலும் இராஜபுத்திரப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு இராஜபுத்திர பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொண்டனர்.[12] இவர்கள் ஈரானின் புகழ்பெற்ற ஜாம்ஷெட் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறுகிறார்கள்.[13][14][15]

கட்ச் பகுதியைச் சேர்ந்த முதலாம் ஜாம் கென்கர்ஜியின் சகோதரியான ஜடேஜி ராணி கமாபாய் சுல்தான் முதலாம் மக்மூத் பெகடாவை மணந்தார். கெங்கர், ‘ராவ்’ என்ற பட்டத்திற்கு உயர்த்தப்பட்டார். பின்னர் 1538 ஆம் ஆண்டில் குசராத்து சுல்தானால் அவருக்கு மோர்வி இராச்சியம் வழங்கப்பட்டது.[16]

1638 முதல் 1663 வரை, பாலன்பூர் நகரம் இரண்டாம் முஜாஹித் கான் என்ற முஸ்லிம் நபரால் ஆளப்பட்டது. அவர் மன்பாய் என்ற ஜடேஜா பெண்ணை மணந்தார். கலப்பு திருமணத்தின் காரணமாக அவர்களின் ஆட்சி மக்களிடையே பிரபலமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.[17][18]

ஒரு ஜடேஜா வம்சம் 1540 முதல் 1948 வரை (இந்தியா குடியரசாக மாறியபோது) கட்ச் மாநிலத்தை ஆட்சி செய்தது. முதலாம் கென்கர்ஜி மன்னரால் இராச்சியம் உருவாக்கப்பட்டது. அவர் தனது கீழ் பன்னிரண்டு ஜடேஜா இன நில உரிமையாளர் குடும்பங்களையும், அவருடன் தொடர்புடையவர்களையும், அத்துடன் பாயத் (பாய் என்றால் சகோதரர், அடிப்படையில் சகோதரர்களாக கருதப்படுகிறார்கள்) என்று அழைக்கப்படும் வகேலா பழங்குடியின குடும்பங்களையும் வைத்திருந்தார். கெங்கர்ஜியும் அவரது வாரிசுகளும் இந்த பாயத்துகளின் விசுவாசத்தைத் தக்க வைத்துக் கொண்டனர். அவர்கள் கிருஷ்ணரின் புராண வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டனர்.[10] இருப்பினும், இவாறான நம்பிக்கைகள் இராஜபுத்திர வம்சாவளியினரிடையே பொதுவானது என்றாலும், இத்தகைய கூற்றுகளுக்கு வரலாற்று அடிப்படை ஏதுமில்லை என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.[19][20][21]

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு ஜடேஜாவால் ஆளப்பட்ட சமஸ்தானங்கள்

[தொகு]

சமூக நெறிமுறைகள்

[தொகு]

ஜடேஜர்கள் உயர்ந்த சமூக அந்தஸ்தையும் கடுமையான சாதி அமைப்பையும் கொண்டிருந்தனர். இவர்கள் குறைந்த சமூகக் குழுக்களுடன்-தங்களுடன் தொடர்புடைய மற்ற அனைத்து குலங்களுடனும்-திருமணம் செய்வதையும், குலத்திற்குள் திருமணம் செய்வதையும் தடை செய்தனர். இதனால் பெண் சந்ததியினருக்கு பொருத்தமான திருமணங்களை ஏற்பாடு செய்வது கடினமான ஒன்றாக இருந்தது. ஒரு பொருத்தம் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதிக வரதட்சணை வழங்கும் தேவை ஏற்பட்டது. இதன் விளைவாக பெண் சிசுக் கொலை என்ற பாரம்பரியத்தை இந்த குலம் உருவாக்கியது.[24] பெண் சிசுக்கொலைக்கு ஆங்கிலேயர்கள் தடை விதித்தபோது, ஜடேஜாக்களின் தலைவர்கள் தங்கள் மகள்களை வாழ அனுமதித்து, சம அந்தஸ்துள்ள பிற இராஜ்புத் தலைவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.[9] நவீன வசதிகள் கிடைக்கும் இடங்களில் இது பால் தெரிவு கருக்கலைப்பு வேறு வடிவத்தை எடுக்கலாம் என்றாலும், இந்த நடைமுறை இன்றும் ஓரளவு தொடர்கிறது.[25]

20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 21ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் கட்ச் பகுதியில் ஆய்வு செய்த சமூகவியலாளர் லைலா மேத்தா, பிற சமூகங்களுக்கு அசாதாரணமான ஜடேஜாக்களின் போக்கைக் கவனித்தார். தண்ணீர் கொண்டு வருவது போன்ற பாலின அடிப்படையிலான உழைப்பில், மற்ற சமூகங்கள் தங்களின் பெண்கள் மற்றும் சிறுமிகளை தண்ணீர் எடுக்க அனுப்பியபோது, ஜடேஜாக்களின் ஆண்கள் கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்து, கிணறுகளில் செல்வாக்கு செலுத்தி, அங்குள்ள பல பெண்கள் மற்றும் சிறுமிகளைக் மிரட்டி வந்தனர். ஜடேஜா பெண்கள் பொதுவெளியில் செல்வதைத் தடுத்த ஓஜ்ஜால் வழக்கமே ஆண்கள் வீட்டிற்காக தண்ணீர் கொண்டு வருவதில் விதிவிலக்காக இருந்தது.[26]

குசராத்தின் ஜடேஜா இராஜபுத்திரர்கள் 'பகுதியளவில் முஸ்லிம்' என்று முத்திரை குத்தப்பட்டதாகவும், அவர்களின் வீடுகளில் பணிபுரிந்த சமையல்காரர்கள் சித்தி சமூகத்தைச் சேர்ந்த அடிமைகள் என்றும் ஜெர்மன் அறிஞர் ஹெலன் பாசு கூறுகிறார்.[27][28]

மதம்

[தொகு]

ஆஷாபுர மாதா என்ற ஒரு இந்துப் பெண் தெய்வம் ஜடேஜர்களின் முக்கிய தெய்வமாகும்.[29][30]

குறிப்பிடத்தக்க நபர்கள்

[தொகு]
  • ஜாம் ராவல்-நவநகர் மாநிலத்தை நிறுவியவர்.
  • பகவத்சின்ஜி-1869 முதல் 1944 வரை கோண்டலின் மகாராஜா, முதல் குசராத் அகராதியான பகவத் கோமண்டலை வெளியிட்டார்.
  • மூன்றாம் கெங்கர்ஜி-உலகின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர்களில் ஒருவரான கட்ச் மாநில ஆட்சியாளர், 1921 ஆம் ஆண்டில் உலக நாடுகள் சங்கம் மற்றும் இம்பீரியல் மாநாட்டில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
  • மதன்ஷின்ஜி-1936 இல் இந்தியா டேவிசுக் கோப்பை மற்றும் 1937 இல் விம்பிள்டன் கோப்பை ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்திய கட்ச்சின் கடைசி ஆட்சியாளர்.[31]
  • ராஜேந்திரசிங்ஜி ஜடேஜா-இந்திய இராணுவத்தின் முதல் தலைமைத் தளபதியும், பின்னர் இந்திய ஆயுதப் படைகளின் தளபதியும் இந்திய இராணுவத்தின் தலைவரும்-நவநகர் மாநிலத்தின் ஆளும் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
  • கே. எஸ். ரஞ்சித்சிங்ஜி-முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர். இவரது பெயரால் ரஞ்சிக் கோப்பை பெயரிடப்பட்டது.
  • பிரபல துடுப்பாட்ட வீரரான கே. எஸ். ரஞ்சித் சிங்ஜியின் மருமகன் குமார் சிரி துலீப்சிங்ஜீ, பின்னர் பல நாடுகளில் இந்திய உயர் ஆணையராக பணியாற்றினார்.[32] துலீப் கோப்பை இவருடைய பெயரில் அழைக்கப்படுகிறது.[33]
  • ஹிம்மத்சிங்ஜி எம். கே.-கட்ச் ஆளும் குடும்பத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பறவையியலாளர் மற்றும் அரசியல்வாதி.[34]
  • அஜய் ஜடேஜா-நவநகர் ஆளும் குடும்பத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற துடுப்பாட்ட வீரர்.[35]
  • ரவீந்திர ஜடேஜா-இந்திய சர்வதேச துடுப்பாட்ட வீரர்.[36]
  • ராஜேந்திரசிங் ஜடேஜா-இந்திய துடுப்பாட்ட வீரர், பயிற்சியாளர் மற்றும் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் முன்னாள் அதிகாரப்பூர்வ நடுவர். சௌராஷ்டிரா, மேற்கு மண்டலம் மற்றும் மும்பை அணிக்காக முதல் தர துடுப்பாட்டம் விளையாடிவர். மேலும் 50 முதல் தர போட்டிகளிலும் விளையாடினார்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Shah, A. M.; Shroff, R. G. (1958). "The Vahīvancā Bāroṭs of Gujarat: A Caste of Genealogists and Mythographers". The Journal of American Folklore 71 (281): 258. doi:10.2307/538561. 
  2. "જાડેજા". Bhagvadgomandal. GujaratiLexicon.
  3. Encyclopedia Sindhiana, Volume 3 - Entry 7148 (in Sindhi). Sindhi Language Authority.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  4. Sheikh, Samira (2009). "Pastoralism, Trade, and Settlement in Saurashtra and Kachchh". Forging a region: sultans, traders, and pilgrims in Gujarat, 1200-1500. Oxford University Press. pp. 101–128. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/acprof:oso/9780198060192.003.0004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780198060192. An example of the process by which a pastoralist group originating in Sind became one of the prestigious Rajput clans of Saurashtra and Kachchh is that of the Sammas. Branches of this clan (who trace their descent to Kṛṣṇa) moved into Kachchh and Saurashtra, where they eventually became the important Rajput ruling houses of the Jāḍejās in Kachchh and the Cūḍāsamās in Junagadh.
  5. Farhana Ibrahim (29 November 2020). Settlers, Saints and Sovereigns: An Ethnography of State Formation in Western India. Taylor & Francis. pp. 127–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-00-008397-2. The Jadejas entered the rank of Rajput society slowly from pastoralist pasts, as was frequently the norm in this region. Steady intermarriage between Jadeja men and Sodha Rajput women in Sindh enabled the former to lay claim to a Rajput identity.
  6. Farhana Ibrahim (29 November 2020). Settlers, Saints and Sovereigns: An Ethnography of State Formation in Western India. Taylor & Francis. pp. 49–50. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-00-008397-2. After the Arab conquest of சிந்து மாகாணம் in the eighth century, pastoralists from Sindh and Arab merchants settled in Kachchh. Some of these pastoralists – the Sammas - were to eventually rise to be the ruling power under the name Jadeja in the mid-1500s. ...At the time, there were Samas in Kachchh as well as Sind. While the Sindhi Samas tended to be Muslim, the Samas in Kachchh were hindus and it is suggested that they might possibly have moved into Kachchh in order ro resist conversion to Islam. (ii):-They also established a kin-based system of administration based on the extraction of agrarian surplus. Adopting Rajput symbol of life was important in the rajputization of the Jadejas, especially to maintain an imperial aura in the face of their subjects
  7. Saxena, Anisha (2018). "Jakh, Jacks, or Yakṣa?: Multiple Identities and Histories of Jakh Gods in Kachchh". Asian Ethnology 77 (1–2): 103. 
  8. Rushbrook Williams, L. F. (1958). The Black Hills. Kutch in history and legend: A study in Indian local loyalties (in ஆங்கிலம் and குஜராத்தி). London: Weidenfeld and Nicolson. p. 91.
  9. 9.0 9.1 Shah & Shroff 1958, ப. 265.
  10. 10.0 10.1 10.2 Saxena, Anisha (2018). "Jakh, Jacks, or Yakṣa?: Multiple Identities and Histories of Jakh Gods in Kachchh". Asian Ethnology 77 (1–2): 103. 
  11. {{cite book}}: Empty citation (help)
  12. Lyla Mehta (2005). The Politics and Poetics of Water: The Naturalisation of Scarcity in Western India. Orient Blackswan. pp. 113–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-250-2869-7. As stated in Chapter 3, the Jadeja Rajputs were the former rulers of Kutch and the Hindu descendants of a முஸ்லிம் tribe that migrated to Kutch from சிந்து மாகாணம்.
  13. Rodrigues, Mario (2003). Batting for the Empire: A Political Biography of Ranjitsinhji. Penguin Books, 2003. p. 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780143029519.
  14. Goswamy, B. N. (1983). A Place Apart: Painting in Kutch, 1720–1820. Oxford University Press, 1983. p. 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195613117.
  15. Syed, M. H. (2004). History Of The Delhi Sultanate (Set Of 2 Vols.). Anmol Publications Pvt. Limited, 2004. p. 240. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788126118304.
  16. Lingen, Jan (2015). Goron, Stan. ed. "Journal of the Oriental Numismatic Society, No. 224, Summer 2015". Journal of the Oriental Numismatic Society (224): 32. பன்னாட்டுத் தர தொடர் எண்:1818-1252. https://www.orientalnumismaticsociety.org/archive/ONS_224.pdf. 
  17. Gujarat State Gazetteers: Banaskantha District. Directorate of Government Print., Stationery and Publications, Gujarat State, 1981. 1981. p. 104.
  18. Commissariat, Manekshah Sorabshah (1957). A History of Gujarat: Mughal period, from 1573 to 1758. Longmans, Green & Company, Limited, 1957. p. 132.
  19. Koyal, Sivaji (1986). "Emergence of Kingship, Rajputization and a New Economic Arrangement in Mundaland". Proceedings of the Indian History Congress (இந்திய வரலாற்றுப் பேராயம்) 47 (I): 536–542. 
  20. André Wink (2002). Al-Hind, the Making of the Indo-Islamic World: Early Medieval India and the Expansion of Islam 7Th-11th Centuries. BRILL. p. 282. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-391-04173-8. In short, a process of development occurred which after several centuries culminated in the formation of new groups with the identity of 'Rajputs'(Rajputization). The predecessors of the Rajputs, from about the eighth century, rose to politico-military prominence as an open status group or estate of largely illiterate warriors who wished to consider themselves as the reincarnates of the ancient Indian Kshatriyas. The claim of Kshatriyas was, of course, historically completely unfounded. The Rajputs as well as other autochthonous Indian gentry groups who claimed Kshatriya status by way of putative Rajput descent, differed widely from the classical varna of Kshatriyas which, as depicted in literature, was made of aristocratic, urbanite and educated clans...
  21. Brajadulal Chattopadhyaya (1994). "Origin of the Rajputs: The Political, Economic and Social Processes in Early Medieval Rajasthan". The Making of Early Medieval India. Oxford University Press. p. 59. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195634150.
  22. Gazetteers: Jamnagar District, Gujarat (India) – 1970 – Page 614 Before the integration of States, Dhrol was a Class II State founded by Jam Hardholji, the brother of Jam Raval, who hailed from the ruling Jadeja Darbar family of Kutch.
  23. 23.0 23.1 Lee-Warner, William (Nov 22, 1912). "Kathiawar". Journal of the Royal Society of Arts 61: 391–392. ProQuest 1307274284. https://www.proquest.com/docview/1307274284. 
  24. "Museum Bulletin". Museum and Picture Gallery, Baroda 26: 47. 1973. https://books.google.com/books?id=uc0r5drrRqAC&q=Jadeja+caste. 
  25. Vishwanath, L. S. (2006). "Female Infanticide, Property and the Colonial State". In Patel, Tulsi (ed.). Sex-Selective Abortion in India: Gender, Society and New Reproductive Technologies. SAGE. pp. 275, 278–282. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780761935391. பார்க்கப்பட்ட நாள் 13 September 2012.
  26. Lyla Mehta (2005). The Politics and Poetics of Water: The Naturalisation of Scarcity in Western India. Orient Blackswan. p. 166. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-250-2869-7. One notable exception is the Jadeja community. As their women are barred from the public realm due to the ojjal system, Jadeja men fetch water for their households.[...]Jadeja men exercise the greatest clout and power at the wells and intimidate many women, especially young Harijan girls.
  27. Shail Mayaram (6 May 2011). Kamala Visweswaran (ed.). Perspectives on Modern South Asia: A Reader in Culture, History, and Representation. John Wiley & Sons. pp. 18–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4051-0062-5. Helene Basu points out that the Jadeja Rajputs of Gujarat who were described as 'half Muslim' employed African சித்தியர்கள் (Muslim) slaves as cooks
  28. B. N. Goswamy; Anna Libera Dallapiccola (1983). A Place Apart: Painting in Kutch, 1720–1820. Oxford University Press. p. 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-561311-7. The connection with the Muslim branches of the Samma families was left behind, but never entirely forgotten . In fact it is a distinguishing feature of Kutch history under the Jadejas that there was remarkable peace between Hindus and Muslims, the Jadejas of Kutch being described by later writers as ' half Muslims ' themselves.
  29. [1] Kutch in festival and custom By K. S. Dilipsinh.
  30. De Neve, Geert; Donner, Henrike (2007). The Meaning of the Local: Politics of Place in Urban India. Taylor and Francis. p. 221.
  31. "Meghrajji Bahadur's GS Performance Timeline & Stats". db4tennis.com. பார்க்கப்பட்ட நாள் 16 November 2015.
  32. "Kumar Shri Duleepsinhji". The Open University Making Britain. பார்க்கப்பட்ட நாள் 20 June 2013.
  33. "Royalty on the cricket field". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 18 May 2018.
  34. "Kutch's royal family member passes away". http://m.oneindia.in/news/2008/02/22/kutchs-royal-family-member-passes-away-1203674740.html. 
  35. "I am suffering irreparably: Ajay Jadeja". http://timesofindia.indiatimes.com/city/pune-times/I-am-suffering-irreparably-Ajay-Jadeja/articleshow/33617885.cms. 
  36. Yadav, Jyoti. "Ravindra Jadeja must stop being a 'Rajput boy' and grow up to be a cricketer". https://theprint.in/opinion/pov/ravindra-jadeja-must-stop-being-a-rajput-boy-and-grow-up-to-be-a-cricketer/402251/. 

மேலும் வாசிக்க

[தொகு]