ஜமால்பூர் | |
---|---|
நகரம் | |
![]() | |
அடைபெயர்(கள்): இரயில் நகரம் | |
ஆள்கூறுகள்: 25°18′N 86°30′E / 25.3°N 86.5°E[1] | |
நாடு | ![]() |
மாநிலம் | பிகார் |
மாவட்டம் | முங்கேர் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | ஜமால்பூர் நகராட்சி |
Area | 90 km2 (30 sq mi) |
ஏற்றம் | 151 m (495 ft) |
மக்கள்தொகை | 1,05,434 |
• அடர்த்தி | 1,200/km2 (3,000/sq mi) |
மொழிகள் | |
எழுத்தறிவு | |
• ஆண்கள் | 92.58% |
• பெண்கள் | 81.40% |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | |
வாகனப் பதிவு | BR-08 |
பாலின விகிதம் | 871 பெண்களுக்கு 1000 ஆண்கள் |
இணையதளம் | www |
ஜமால்பூர் (Jamalpur), வட இந்தியாவில் பிகார் மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்த முங்கேர் மாவட்டத்தில் அமைந்த நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாவட்டத் தலைமையிடமான முங்கேர் நகரத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான பாட்னாவிற்கு கிழக்கே 186 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 36 வார்டுகளும், 20,372 வீடுகளும் கொண்ட ஜமால்பூர் நகரத்தின் மக்கள் தொகை 1,05,434 ஆகும். அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் 880 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 880 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 86.5% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 15,270 மற்றும் 1,411 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 94.62%, இசுலாமியர் 4.31%, கிறித்தவர்கள் 0.81% மற்றும் பிறர் 0.25% ஆகவுள்ளனர். இந்நகர மக்கள் இந்தி மொழி மற்றும் உருது மொழிகள் பேசுகின்றனர்.[4]
ஜமால்பூர் நகரத்தில் 1862-ஆம் ஆண்டில் இரயில் எஞ்சின் உற்பத்தி தொழிற்சாலை துவக்கப்பட்டது.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)