ஜம்னாலால் பஜாஜ் விருது Jamnalal Bajaj Award | |
---|---|
தேதி | 1978 |
நாடு | இந்தியா |
வழங்குபவர் | ஜம்னாலால் பஜாஜ் அறக்கட்டளை |
காந்திய விழுமியங்கள், சமூக சேவை மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றில் சேவையாற்றி மேம்படுத்தியதற்காக இந்தியாவில் வழங்கப்படும் விருது, ஜம்னாலால் பஜாஜ் விருது (Jamnalal Bajaj Award) ஆகும்.[1] இந்த விருதானது 1978ஆம் ஆண்டில் பஜாஜ் குழுமத்தின் ஜம்னாலால் பஜாஜ் அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் நான்கு பிரிவுகளின் கீழ் இந்த விருது வழங்கப்படுகிறது. பொதுவாக இந்த விருது, இந்தியக் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், இந்தியப் பிரதமர் அல்லது முன்னணி நபர் ஒருவரால் வழங்கப்படும். இந்த அறக்கட்டளையின் தலைவராக தற்போது ராகுல் பஜாஜ் உள்ளார். இந்த அறக்கட்டளை 1977இல் பரோபகாரர் மற்றும் மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பரானஜம்னாலால் பஜாஜின் நினைவாக உருவாக்கப்பட்டது.[2] இந்த விருது ஜம்னால் பஜாஜ் பிறந்த நவம்பர் 4 அன்று ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு, மேற்கோள், கோப்பை மற்றும் ரூ. பத்து லட்சம் காசோலை வழங்கப்படும்.[3] இது நான்கு பிரிவுகளில் கொடுக்கப்படுகிறது.[4] அவை:
ஜம்னாலால் பஜாஜின் நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் வகையில், அறக்கட்டளை 1990இல் நெல்சன் மண்டேலாவுக்குச் சிறப்பு விருதை வழங்கியது.[5]
வருடம் | ஆக்கபூர்வ பணி | அறிவியல் தொழிற்னுட்பம் | பெண்கள் குழநைகள் நலம் | பன்னாட்டு விருது |
---|---|---|---|---|
1978 | ஜுகத்ரம் டேவ் | சதீஷ் சந்திர தாஸ் குப்தா | ||
1979 | சர்ளா பென்i & பாபா ஆம்தே | ஜெயந் சாம்ராவ் பாட்டீல் | ||
1980 | காந்தி நிகேதன் ஆசிரமம், தே. கல்லுப்பட்டி | அனில் சத்கோபால் | ஜெயஸ்ரீ ரைஜி & கமலாபாய் ஹோஸ்பெட் | |
1981 | அமல்பிரவ தாஸ் | அ. மு. மு. முருகப்ப செட்டியார் | இரமாதேவி சௌத்ரி | |
1982 | கோகுல்பாய் தொளலத்ராம் பட் | பிரேம்பாய் | தாராபென் மஷ்ருவாலா | |
1983 | தாகதுரு ராம்சந்திர ராவ் | மணிபாய் தேசாய் | புஷ்பபென் மேத்தா | |
1984 | போபட்லால் ராம்சந்திர ஷா | மோகன் நர்ஹரி பரிக் | கெளரா தேவி | |
1985 | தி. சு. அவிநாசிலிங்கம் | சஞ்த் ராய் | அனூட் வாக் | |
1986 | சுந்தர்லால் பகுகுணா | வில்லாக்கள் ஆ. சலுங்கே | வசந்தி எஸ். ராய் | |
1987 | நட்வர் தக்கர் | சுனித் தனாஜி போண்டே | அன்னபிரகத எஸ். கிருஷ்ண ராவ் | |
1988 | ஜெகநாதன் & கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் | ஈஸ்வர்பாய் படேல் | மால்டி தேவி சவுத்ரி | பியர் பரோடி |
1989 | கே.ஜனர்தனன் பிள்ளை | தா. கோ. கு. மேனன் | இந்திராபாய் கல்மே | டானிலோ டோல்சி |
1990 | தீரத் ராம் | எஸ். ஏ. தபோல்கர் | ரத்தன் சாஸ்திரி | ஏ. டி. ஆரியரத்தினா |
1991 | துவாரகோ சுந்தரணி | கிருஷ்ணமூர்த்தி மிர்மிரா | ராதா பட் | சார்லசு வாக்கர் |
1992 | தகுர்தாஸ் பேங் | ஏ. விஸ்வநாதன் | ஷாலினி மாகே | ஹோமர் ஏ. ஜாக் |
1993 | விசித்ரா நரேன் சர்மா | டிங்கராவ் சி. பவார் | காந்தபென் மற்றும் ஹரிவிலஷாபென் ஷா | ஜோஹன் கல்துங் |
1994 | எல்.என்.கோபாலசாமி | வி. எஸ். அகர்வால் | சாந்தி தேவி | ஜெடோங் பாகசு ஒக்லா |
1995 | காஷிநாத் திரிவேதி | ஜி. முணி ரத்னம் | விமலா பகுன | கமலா |
1996 | மனுபாய் பஞ்சோலி | எஸ். எஸ். கல்பாக் | இந்துமதி பரிக் | அடோல்போ டி ஒபீட்டா |
1997 | ஆர்.கே. பாட்டீல் | எஸ். எஸ். கட்கிஹோலிமத் | வினோபா நிகேதன் | யங் சீக் சொவி |
1998 | ஆச்சார்யா ராமமூர்த்தி | தேவேந்திர குமார் | இராசாம்பாள் பா. தேவதாசு | ஜர்ணா தாரா சௌத்ரி |
1999 | நாராயண் தேசாய் | அஜாய் குமார் பாசு | சரஸ்வதி கோரா | ஜோசப் ரோட்ப்ளாட் |
2000 | சோம்தத் வேதலங்கர் | பாஸ்கர் சேவ | வித்யா தேவி | டெசுமான்ட் டுட்டு |
2001 | சிசிர் சன்யால் | அனில் கே.ராஜ்வன்ஷி | ரெஹ்மத் சுல்தான் பாஸல்பாய் | சதீஷ் குமார் |
2002 | சித்தராஜ் தத்தா | அருண்குமார் தேவ் | சித்ரா நாயக் | ஜார்ஜ் டபிள்யூ. வில்லோபி |
2003 | ரவீந்திர நாத் உபாத்யாய் | விநாயக் பாட்டீல் | ஆலிஸ் கார்க் | டாக்டர் மேரி ஈ. கிங் |
2004 | ராதாகிருஷ்ணா பஜாஜ் | பிரபாகர் சங்கர் தாக்கூர் | சரோஜினி வரதப்பன் | மேரி தோகர் |
2005 | பி. கோபிநாதன் நாயர் | ராஜேந்திர சிங் | அருணாபென் சங்கர்பிரசாத் தேசாய் | டெய்சாகு இக்கேடா |
2006 | எஸ். என். சுப்பாராவ் | அனில் பிரகாஷ் ஜோஷி | ராணி அபய் பேங் | இஸ்மாயில் செராகெல்டின் |
2007 | யஷ்பால் எம். மிட்டல் | ஆனந்த் டிங்கர் கார்வே | அசோக குப்தா | மைக்கேல் நாக்லர் |
2008 | பிஸ்வநாத் பட்நாயக் | துஷார் காஞ்சிலால் | பூல்பசன் பாய் யாதவ் | லூயிஸ் காம்பனா |
2009 | லாவனம் | அய்யப்பா மசகி | ஜெயா அருணாச்சலம் | சார்லஸ் பீட்டர் டகெர்டி |
2010 | சுனிபாய் வித்யா | செவாங் நோர்பெல் | சகுந்தலா தேவி சவுத்ரி | லியா டிஸ்கின் |
2011 | ரமேஷ் பயா மற்றும் விமலா சகோதரி | அனுபம் மிஸ்ரா | சோபனா ராணடே | அகசு இந்திர உதயனா |
2012 | ஜெயந்த் மாத்கர் | கல்யாண் பால் | க்ளென் தி. பைஜ் | நிகாத் ஷாஃபி |
2013 | ஜி. வி. சுப்பா ராவ் | சினேகலதா நாத் | வித்யா தாஸ் | ஜீன்-மேரி முல்லர் |
2014 | சுரேந்திர கவுல்கி | ராம்குமார் சிங் | சென்னுபதி வித்யா | சுலக் சிவரட்சா |
2015 | மன் சிங் ராவத் | பெருமாள் விவேகானந்தன் | ஆன் ஃபெரர் | மினோரு கசாய் |
2016 | மோகன் ஹிராபாய் ஹிரலால் | பி. வி. நிம்பாகர் | என். மங்கா தேவி | ரேச்செட் கானோச்சி |
2017 | சஷி தியாகி | ஜன் சுவாச்த்யா சகாயோக் | பிரவீன் நாயர் | ஜியாத் மெடோக் |
2018 | தூம் சிங் நேகி | ரூபல் தேசாய் | பிரசன்னா பண்டாரி | கிளேபோர்ன் கார்சன் |
2019 | பவானி சங்கர் குசும் | மொகமது இம்ரான் கான் மேவதி | ஷாஹீன் மிஸ்திரி | சோனியா டியோட்டோ |
2020[6] | கொரோனா பெருந்தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டது | |||
2021 | தரம்பால் சைனி | இலால் சிங் | லூசி குரியன் | டேவிட் எச். ஆல்பர்ட் |
{மேலும் மீனா அகர்வால் .1998 (அசாம்) |} {சகோதரி மைதாலி .1999 (கேரளா) |} {குந்தலா குமாரி ஆச்சார்யா 2001 (ஒடிசா) |}