ஜம்மு காஷ்மீர் நமது கட்சி | |
---|---|
சுருக்கக்குறி | JKAP |
தலைவர் | அல்தாப் புகாரி |
தொடக்கம் | 2020 |
பிரிவு | சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி |
கொள்கை | பிரதேச உணர்வு பிரதேச வளர்ச்சி மதச்சார்பின்மை |
நிறங்கள் | சிவப்பு , வெண்மை , நீலம் |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 0 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 0 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம்) | 0 / 90 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மாவட்ட வளர்ச்சி குமுக்கள்) | 12 / 280 |
இணையதளம் | |
jkapniparty | |
இந்தியா அரசியல் |
ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி (Jammu and Kashmir Apni Party (JKAP) ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியான பின்னர் மார்ச், 2020 நிறுவப்பட்ட அரசியல் கட்சி ஆகும். மெகபூபா முப்தி தலைமையிலான சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சியிலிருந்த அல்தாப் புகாரி இதன் நிறுவனத் தலைவர் ஆவார்.[1] இக்கட்சியின் பொதுச்செயலர்கள் ரபி அகமது மீர், விஜய் பாக்கியா மற்றும் விக்ரம் மல்கோத்ரா ஆவர். சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இருந்த தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினர்களால் 8 மார்ச் 2020 அன்று ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி துவக்கப்பட்டது.[2] இக்கட்சியின் நிறுவனத் தலைவராக அல்தாப் புகாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இக்கட்சியின் முக்கிய நோக்கம் ஜம்மு காஷ்மீர் பிரதேச உணர்வு, வளர்ச்சி மற்றும் மதச்சார்பின்மை ஆகும்.