ஜயமதி (அசாமியம்:ஜோய்மோதி) என்பது 1935 ஆம் ஆண்டில் வெளியான அசாமிய மொழித் திரைப்படம். இது வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்த மொழி ஒன்றில் வெளியான முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.[1] பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சோதி ஜோய்மோதி என்னும் அரசியைப் பற்றிய கதையை மையப்படுத்தி திரைப்படம் உருவாக்கப்பட்டது. இதை ஜோதி பிரசாத் அகர்வாலா தயாரித்து, இயக்கினார். பல திரைப்பட விழாக்களில் இந்த படம் திரையிடப்பட்டது. பனு பருவா, ஐதியூ ஹந்திக், மோகினி ராஜகுமாரி, பனி சர்மா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்தனர்.