ஜலகம் வெங்கல் ராவ் பூங்கா Jalagam Vengal Rao Park | |
---|---|
வகை | இயற்கைச்சூழல் |
அமைவிடம் | பஞ்சாரா ஹில்ஸ், ஐதராபாத்து (இந்தியா), தெலங்காணா |
அண்மைய நகரம் | ஐதராபாத்து (இந்தியா) |
ஆள்கூறு | 17°25′22″N 78°26′56″E / 17.422642°N 78.448817°E |
பரப்பளவு | 10 ஏக்கர் |
இயக்குபவர் | பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி |
திறந்துள்ள நேரம் | 2002 |
ஜலகம் வெங்கல் ராவ் பூங்கா (Jalagam Vengal Rao Park) என்பது ஜேவிஆர் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. இப்பூங்கா இந்தியாவின் தெலங்காணா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் 5வது முதல்வர் ஜலகம் வெங்கல ராவின் நினைவாக இந்தப் பூங்காவுக்குப் பெயரிடப்பட்டது.[1]
இந்தப் பூங்கா பராமரிப்பு பணியைத் தனியார் ஒப்பந்ததாரரிடம் பெருநகர் ஐதராபாத்து மாநகராட்சி ஒப்படைத்துள்ளது. பூங்காவில் இப்போது விருந்து மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.[2]