ஜலதுர்கா | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 16°15′14″N 76°25′16″E / 16.254°N 76.421°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | ராய்ச்சூர் மாவட்டம் |
அரசு | |
• வகை | பஞ்சாயத்து |
• நிர்வாகம் | கிராம ஊராட்சி |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
தொலைபேசிக் குறியீடு | 08537 |
ஐஎசுஓ 3166 குறியீடு | ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என் |
வாகனப் பதிவு | கேஏ-36 |
இணையதளம் | karnataka |
ஜலதுர்கா (Jaladurga) என்பது இந்திய மாநிலமான கருநாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள லிங்சுகூர் நகரத்திற்கு சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமாகும். நகரின் வடகிழக்கில் பிஜாப்பூரின் சுல்தானியர்கள் இங்கு ஒரு கோட்டையை கட்டினர். கிருஷ்ணா ஆறு இங்கே ஜலதுர்கா அருவி என்றப் பெயரில் பாய்கிறது.
இந்த பிராந்தியத்தில் இது ஒரு சுற்றுலா தலமாகும். ஜலதுர்கா தனித்துவமான தீவு கோட்டையைக் கொண்டுள்ளது. இக்கோட்டைக்கு ஏழு வாயில்கள் இருந்தன. இது லிங்சுகூரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ளது. கிருஷ்ணா ஆறு மலையைச் சுற்றி கிழக்குப் பக்கம் பாய்கிறது. கோட்டை ஒரு காலத்தில் பிஜப்பூர் சுல்தானகத்தின் கோட்டையாக இருந்தது என்பதை நிரூபிக்க குறிப்பிட்ட பதிவுகள் எதுவும் இல்லை. கோட்டை பாழடைந்த நிலையில் உள்ளது. கோட்டையின் உச்சியில் ஒரு அரண்மனையும் ஒரு பாதாள அறையும் இருந்தது. [1] மன்னர்களின் சில கல்லறைகள் உள்ளன. ஆனால் அடையாளம் இல்லை, சங்கமேசுவரர் கோயில், எல்லம்மா கோயில் ஆகியவை உள்ளது. கிருஷ்ணா ஆற்றின் பக்கங்களும் மணல் நிறைந்தவை அல்ல, மென்மையான கற்பாறைகள் நிறைந்தவை. இது மந்தனா மடுவு என்று அழைக்கப்படுகிறது. ஜலதுர்காவில் உருது மற்றும் தேவநாகரி எழுத்துக்களில் எழுதப்பட்ட ஒரு சிறிய கல்வெட்டு உள்ளது.
உள்ளூர் நம்பிக்கையின்படி, பசவண்ணாவின் ஒரு லட்சம் வசனங்கள் அடங்கிய பெட்டி ஒன்று ஆற்றில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை உலகின் பிற பகுதிகளிலிருந்து மறைக்கப்பட்ட இரகசியமெனவும் ஒரு கதை உலவுகிறது.
வனத்துறையால் கட்டுபடுத்தப்டப்பட்ட ஒரு காடு உள்ளது. இங்கு நரி, கழுதைப்புலி, முயல், கீரி போன்றவை காணப்படுகின்றன.