ஜவாலாமுகி | |
---|---|
பிறப்பு | வீரவள்ளி ராகவாச்சாரியுலு ஏப்ரல் 18, 1938 சீதாரம்பாக், ஐதராபாத்து, தெலங்காணா |
இறப்பு | திசம்பர் 14, 2008 சோமாஜிகுடா, தெலங்காணா | (அகவை 70)
பணி | கவிஞர், அரசியல் செயற்பாட்டாளர் |
வாழ்க்கைத் துணை | சீதாதேவி |
பிள்ளைகள் | சம்பத் குமார், சிறீதர் வாசு |
ஜவாலாமுகி என்பது வீரவல்லி ராகவாச்சாரியுலுவின் புனைபெயர் (18 ஏப்ரல் 1938) – 14 திசம்பர் 2008) ஆகும். இவர் ஓர் இந்தியக் கவிஞர், நாவலாசிரியர், எழுத்தாளர் மற்றும் அரசியல் ஆர்வலர் ஆவார்.
ஜவாலாமுகி தனது ரங்கேய ராகவா வாழ்க்கை வரலாறு நாவலுக்காக சாகித்ய அகாதமி விருதை (இந்தி) வென்றார். இவரது நாவல்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கவிதைகளில் முக்கியமானவை வேலடின மந்தாரம், ஹைதராபாத் கதலு மற்றும் வோடமி-திருகுபது.[1]
ஜவாலாமுகி "திகம்பர கவுலு" என்ற கவிஞர்களின் குழுவில் உறுப்பினராக இருந்தார். இதன் பார்வைகள் மற்றும் பாணி நவீன தெலுங்கு இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கியமானதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவர் 1970-ல் புரட்சிகர எழுத்தாளர்கள் சங்கத்தின் (விரசம்) இணை நிறுவனராகவும், மக்கள் ஜனநாயக உரிமைகளுக்கான அமைப்பின் தீவிர உறுப்பினராகவும், இந்தியா-சீனா நட்புறவு சங்கத்தின் நிறுவனராகவும் இருந்தார். இவர் இறக்கும் வரை இந்தியா-சீனா நட்புறவு சங்கத்தின் ஆந்திரப் பிரதேச செயலாளராகவும் தேசிய துணைத் தலைவராகவும் இருந்தார்.[2]
ஜவாலாமுகி ஐதராபாத்தில் உள்ள சீதாரம்பாக் பகுதியில் பிறந்தார். இவர் சீதாரம்பாக் குடியிருப்பாளர்கள் நலச் சங்கத்தை நிறுவினார் மற்றும் லக்ஷ்மி நிவாஸ் கனேரிவாலை எதிர்த்தார்.[1] 1970-ல் விரசம் நிறுவப்பட்ட பிறகு, 1971-ல் ஜவாலாமுகி தனது எழுத்துக்களுக்காக இரண்டு விரசம் உறுப்பினர்களுடன் ஆந்திர தடுப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.[3][4] இவரது கவிதைகளில் ஒன்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 99இன் கீழ் தடைசெய்யப்பட்டது. மேலும் இக்கவிதை வெளியான புத்தகத்தின் அனைத்து நகல்களும் கைப்பற்றப்பட்டன.[3][4]
"தீவிரப் பேச்சாளர், ஜவாலாமுகி ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதற்கு அப்பால் பல தசாப்தங்களாக விரிவாகப் பயணம் செய்து உரை ஆற்றினார்" என்று தி இந்துவில் ஒரு கட்டுரை கூறுகிறது. "இவர் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து முக்கிய சமூக இயக்கங்களுடனும் தொடர்புடையவர்."[2]
சில ஆண்டுகளாகக் கல்லீரல் ஈரல் அழற்சி நோய்க்கான சிகிச்சையிலிருந்தபோது, ஜவாலாமுகி மாரடைப்பால், திசம்பர் 14, 2008 அன்று சோமாஜிகுடாவில் உள்ள கார்ப்பரேட் மருத்துவமனையில் இறந்தார். இவருடைய மனைவி சீதாதேவி, மகன்கள் சம்பத்குமார், ஸ்ரீதர், வாசு ஆவர்.[1]