ஜாகனவி பருவா (Jahnavi Barua) அசாமைச் சேர்ந்த இந்திய எழுத்தாளர் ஆவார். இவர் கிளர்ச்சியைப் பின்னணியாகக் கொண்டு அசாம் மொழியில் எழுதப்பட்ட சிறுகதைத் தொகுப்பான 'நெக்ஸ்ட் டோர்' ஆசிரியர் ஆவார். இந்தத் தொகுப்பு விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டது.[1][2] பருவா பெங்களூரில் வசித்துவருகின்றார். குவகாத்தி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்தார். இருப்பினும் மருத்துவர் தொழிலை இவர் தொடரவில்லை.[3][4] ஐக்கிய இராச்சியத்தில் படைப்பு எழுத்து குறித்து கற்றுள்ளார்.[5]
ஒரு மறுபிறப்பு என்பது தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான தனித்துவமான பிணைப்பைப் பற்றியது. பெற்றோரைப் பற்றியது அல்ல. கருவில் இருக்கும் குழந்தையைத் தாய் சுமக்கும் குறிப்பிட்ட காலகட்டம் குறித்து இவரது இலக்கியப் படைப்பில் அழகாக வெளிப்படுகிறது.[6]
அண்டர்டோ என்பது இடம்பெயர்வு, நாடுகடத்தல் மற்றும் தனிமை பற்றிய ஒரு நாவல். தொற்றுநோய்க்குப் பிந்தைய உலகில் நாம் போராடுகிறோம் என்பது குறித்து இயற்றப்பட்டுள்ளது.[7]