Jahut / Jahet / Cheres | |
---|---|
![]() மலேசியா சிலாங்கூர் மாநிலத்தில் ஜாகுட் மக்கள் | |
மொத்த மக்கள்தொகை | |
4,191 (2010)[1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
![]() ![]() | |
மொழி(கள்) | |
ஜாகுட் மொழி, மலாய் மொழி | |
சமயங்கள் | |
ஆன்மவாதம்,இசுலாம், கிறிஸ்தவம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
செமாய் மக்கள், தெமியார் மக்கள்[2]:75 |
ஜாகுட் மக்கள் (ஆங்கிலம்: Jah Hut People; மலாய்: Orang Jah Hut; Jahut; Jahet; Cheres) என்பவர்கள் தீபகற்ப மலேசியாவின் ஒராங் அஸ்லி இனக்குழுவைச் சேர்ந்தவர்கள்; பகாங் மாநிலத்தை மையமாகக் கொண்ட செனோய் மக்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
2000-ஆம் ஆண்டு நிலவரப்படி, ஜாகுட் மக்களின் மக்கள் தொகை 2,442[[3]; மற்றும் 2005-ஆம் ஆண்டில், அவர்களின் மக்கள் தொகை ஏறக்குறைய 4,000 ஆகும்.[4]
பகாங் மாநிலத்தின், ஜெராண்டுட், தெமெர்லோ நகரங்களின் வழியாகச் செல்லும் பகாங் ஆற்றின் கரைகளில் உள்ள 11 கிராமங்களில் ஜாகுட் மக்கள் வசிக்கின்றனர். இந்த 11 கிராமங்களும் பகாங் ஜெராண்டுட் வெப்பமண்டலக் காடுகளில் அமைந்துள்ளன.
அந்தக் கிராமங்களில் கெபோய் கிராமும் ஒன்றாகும். மிகச்சிறிய அந்தக் கிராமத்தில் ஏறக்குறைய 100 பேர் மட்டுமே வசிக்கின்றனர். மலாய் வீடுகளைப் போலவே முட்டுத் தூண்களில் கட்டப்பட்ட வீடுகளில் ஜாகுட் மக்கள் வாழ்கின்றனர்.
மலேசியாவில் ஜாகுட் மக்கள் தொகை (2010):-
ஆண்டு | 1960[5] | 1965[5] | 1969[5] | 1974[5] | 1980[5] | 1993[6] | 1996[5] | 2000[7] | 2003[7] | 2004[8] | 2010[1] |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மக்கள் தொகை | 1,703 | 1,893 | 2,103 | 2,280 | 2,442 | 3,193 | 3,193 | 2,594 | 5,104 | 5,194 | 4,191 |