ஜாசின் (P139) மலேசிய மக்களவைத் தொகுதி மலாக்கா | |
---|---|
Jasin (P139) Federal Constituency in Malacca | |
ஜாசின் மக்களவைத் தொகுதி (P139 Jasin) | |
மாவட்டம் | ஜாசின் மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 96,208 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | ஜாசின் தொகுதி |
முக்கிய நகரங்கள் | பெம்பான், ரிம், செர்க்காம், மெர்லிமாவ், சுங்கை ரம்பை |
பரப்பளவு | 479 ச.கி.மீ[3] |
முன்னாள் நடப்பிலுள்ள தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | சுல்கிப்லி இசுமாயில் (Zulkifli Ismail) |
மக்கள் தொகை | 134,531[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
ஜாசின் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Jasin; ஆங்கிலம்: Jasin Federal Constituency; சீனம்: 野新国会议席) என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தின் மத்திய மலாக்கா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P139) ஆகும்.[5]
ஜாசின் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து ஜாசின் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
ஜாசின் மாவட்டம் என்பது மலாக்கா மாநிலத்தில் உள்ள மூன்று நிர்வாக மாவட்டங்களில் ஒன்றாகும். கிழக்கே ஜொகூர் மாநிலத்தின் தங்காக் மாவட்டம்; வடக்கே நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தம்பின் மாவட்டம்; மேற்கில் அலோர் காஜா மாவட்டம்; மற்றும் மத்திய மலாக்கா மாவட்டம்; ஆகியவை எல்லைகளாக உள்ளன. ஜாசின் மாவட்டம் 20 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. அதன் தலைநகரம் ஜாசின்.
மலாக்கா மாநிலத்தில் ஜாசின் மாவட்டம் மிகப் பெரிய மாவட்டமாகும். மாநில பரப்பளவில் 41.47% அளவு கொண்டது. கீசாங் நதி ஜாசின் நகரத்தின் வழியாகச் செல்கிறது. கீசாங் நதி, ஜாசின் புதிய நகரத்தையும் பழைய நகரத்தையும் மையப் பகுதியில் பிரிக்கிறது. ஜாசின் மாவட்டம் ஏறக்குறைய 75% தட்டையான சமவெளி கொண்டது. எந்தப் பகுதியும் கடல் மட்டத்தில் இருந்து 50 மீட்டர் உயரத்திற்கு மேல் இல்லை.[7]
ஜாசின் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1974-ஆம் ஆண்டில் ஜாசின் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
4-ஆவது மக்களவை | P096 | 1974–1978 | அகமட் இசுனின் (Ahmad Ithnin) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | அப்துல் காபார் பாபா (Abdul Ghafar Baba) | ||
6-ஆவது மக்களவை | 1982–1986 | |||
7-ஆவது மக்களவை | P114 | 1986–1990 | ||
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P124 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | அபு சாகார் இசுனின் (Abu Zahar Ithnin) | ||
11-ஆவது மக்களவை | P139 | 2004–2008 | முகமட் சாயிட் யூசோப் (Mohammad Said Yusof) | |
12-ஆவது மக்களவை | 2008–2013 | அகமட் அம்சா (Ahmad Hamzah) | ||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | சுல்கிப்லி இசுமாயில் (Zulkifli Ismail) |
பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
சுல்கிப்லி இசுமாயில் (Zulkifli Ismail) | பெரிக்காத்தான் நேசனல் | 27,893 | 35.95 | 35.95 | |
ரோசுலான் அகமட் (Roslan Ahmad) | பாரிசான் நேசனல் | 27,571 | 35.53 | 7.47 ▼ | |
அருண் முகமட் (Harun Mohamed) | பாக்காத்தான் அரப்பான் | 21,674 | 27.93 | 14.72 ▼ | |
முகமட் தாவூத் நாசிர் (Mohd Daud Nasir) | தாயக இயக்கம் | 460 | 0.59 | 0.59 | |
மொத்தம் | 77,598 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 77,598 | 99.07 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 731 | 0.93 | |||
மொத்த வாக்குகள் | 78,329 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 96,208 | 81.42 | 4.25 | ||
பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
மூலம்: [9] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)