ஜான் டிரேஸ் (Jean Drèze) என்பவர் இந்திய வளர்ச்சி குறித்து ஆராயும் பொருளியலாளர் மற்றும் செயற்பாட்டாளர் ஆவார். பெல்ஜியத்தில் பிறந்த இவர் இந்தியாவில் நிலவும் பசி, பட்டினி, பஞ்சம், ஆண் பெண் ஏற்றத்தாழ்வுகள் குழந்தைகள் நலம், கல்வி தொடர்பான சிக்கல்களை ஆராய்பவர்.[1][2] மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் என்னும் வேலை வாய்ப்புத் திட்டத்தைப் பற்றி ஆராய்ந்து பரிந்துரைகளை நடுவணரசுக்கு அளித்தவர்.
நோபல் பரிசு அறிஞர் அமர்த்தியா சென்னுடன் இணைந்து சில நூல்கள் எழுதியுள்ளார். அதுபோல நிகோலஸ் ஸ்டாரன், ஆங்கஸ் டேடன் ஆகியோருடனும் இணைந்து நூல்கள் எழுதியுள்ளார். ஜான் டிரேஸ் தில்லி பொருளியல் பள்ளியில் மதிப்புறு பேராசிரியராக இருக்கிறார். ராஞ்சி பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் வருகைப் பேராசிரியராகவும் இருக்கிறார். இந்திய தேசிய ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.[3]
ஜான் டிரேஸ் பெல்ஜியத்தில் கல்வி கேள்விகளில் சிறந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை பொருளியல்துறை பல்கலைக்கழகப் பேராசிரியர். இவருடைய சகோதரர் சேவியர் டிரேஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி அறிஞர்.[4] 1980களில் எஸ்ஸக்ஸ் பல்கலைக்கழகத்தில் கணிதப் பொருளியல் கற்றார். பின்னர் இவர் தமது ஆராய்ச்சியை புது தில்லியில் உள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் செய்தார்.[5] 1979 முதல் இந்தியாவில் வசித்து வரும் இவர் இந்தியக் குடிமகன் ஆனார்.
1980களில் இலண்டன் பொருளியல் பள்ளியிலும், தில்லி பொருளியல் பள்ளியிலும் பேராசிரியராகப் பணி செய்தார். பின்னர் ஜி.பி. பந்த் அறிவியல் பள்ளியில் வருகைப் பேராசிரியராகப் பணி செய்தார். இந்திய அரசின் திட்டக்குழுவில் திட்டம் மற்றும் வளர்ச்சிப் பிரிவில் மதிப்புறு பேராசிரியராக இருந்தார். பொருளியல் வளர்ச்சிக்கும், பொதுமக்கள் பொருளியல் வளர்ச்சிக்கும் பல்வேறு திட்டங்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார். பசி, பிணி, பஞ்சம், கல்வி, பாலின வேறுபாடுகள், குழ்நதைகள் நலம், வேலை வாய்ப்புகள், பள்ளிஉணவுத் திட்டம் போன்ற பல சிக்கல்களை ஆராய்ந்து தம் நூல்களிலும் கட்டுரைகளிலும் வெளிப்படுத்தினார். உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் பலன்பூரில் வாழ்ந்து களஆய்வுகள் செய்தார். சிற்றூர்களில் தங்கி நேரடியான ஆய்வுகளில் ஈடுபட்டு இந்தியாவின் வறுமை வாழ்வியல் நிலைகள் ஆகியனவற்றை எழுதினார். நோபல் பரிசு பொருளியல் அறிஞர் அமர்த்தியா சென்னுடன் பணி செய்து கூட்டாக நூல்கள் எழுதி வெளியிட்டார்.[6]
ஜான் டிரேஸ் சமூகநீதி என்ற கொள்கையில் உறுதியாய் இருந்தார். ஆய்வுப்பட்டக் கல்வி பயிலும்போதும் அதன் பின்னரும் எளிய வாழ்க்கையை தம் விருப்பத்தின் அடிப்படையில் மேற்கொண்டார்.[7] வீடுகளற்ற ஏழை மக்களுடன் வாழ்ந்தார். அவர்களுக்கு வீடுகள் கிடைக்கச் செய்தார். இலண்டனில் வீடுகள் அற்ற அனாதைகள் பற்றி ஒரு சிறு நூலை எழுதினார்.[8] தில்லியில் இவர் தம் மனைவியுடன் சிறு ஓலைக் குடிசையில் வாழ்ந்தார்.
இவை அல்லாமல் அமைதிக்கான இயக்கம், தகவல் பெறும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வர முயற்சி, உணவு பெறும் உரிமை ஆகியவற்றில் ஈடுபட்டார்.[9] ஈராக் போர் 1990- 1991 இல் நடந்தபோது போர் அமைதிக்காகக் கட்டுரைகள் எழுதினார்
{{cite web}}
: CS1 maint: bot: original URL status unknown (link)